மாடியிலிருந்து குதித்து இந்தி நடிகை தற்கொலை !

இந்தியா சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
suicide 3 - 2026

இந்தி திரைப்பட நடிகை ஒருவர் மன உளைச்சலால் அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள தன் வீட்டிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

perl panchabhi - 2026

நடிக்க ஆசைப்பட்டு பெரிய நடிகை ஆகும் கனவில் வருகின்ற பெண்கள் கதாநாயகி வேடம் கிடைக்காமல் வாழ்க்கை ஓட்டுவதற்காக சின்ன சின்ன வேடங்களில் நடித்து காலம் தள்ளுவார்கள். இவர்களால் பணக்கார வாழ்வை தேடிவிட்டு கீழ் இறங்கி வரவும் முடியாமல் சினிமாவில் வாய்ப்பும் இன்றி தவிப்பார்கள். பல துணை நடிகைகள் நடிக்க படம் ஏதுமின்றி தற்கொலை செய்து கொள்வது பெரும்பாலும் நடக்கும் ஒரு விஷயமாகவே உள்ளது.

அப்படி ஒரு நடிகை தற்பொழுது தற்கொலை செய்துகொண்டுள்ளார். மும்பையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியபடி சினிமா வாய்ப்புகளை தேடி வந்தவர் பெர்ல் பஞ்சாபி.

app - 2026

ஓஷிவாராவில் லோகண்ட்வாலாவில் உள்ள கென்வுட் அபார்ட்மென்ட்டில் தாயாருடன் வசித்து வந்தார். இவருக்கு நீண்ட நாட்களாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்தார். தொடர்ந்து தனது தாயாருடன் சண்டையிட்டு வந்து உள்ளார்.

ஒருசில திரைப்படங்களில் சின்னதாக கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால் தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு அந்த பெண் வீட்டில் சண்டையிட்டார். இரவு 12:30 மணியளவில், அவள் மொட்டை மாடியில் இருந்து குதித்தார். உடனடியாக அவர் கோகிலாபென் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது

இதற்கு முன் அவர் 2 முறை தற்கொலைக்கு முயன்று உள்ளார் அதில் இருந்து காப்பாற்றப்பட்டு உள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.