ஒரு வேளாள பக்தர் பெரியவாளிடம் கேட்டார் .”நான்…..காயத்ரி மந்த்ரம் சொல்லலாமா?..” என்று.
ரொம்பவே தர்மசங்கடமான கேள்வி! “சொல்லலாம் அல்லது கூடாது” என்று எந்த பதிலை சொன்னாலும் எதிர்ப்பு வரும்.
2012-பதிவு
–ரொம்பவே தர்மசங்கடமான கேள்வி! “சொல்லலாம் அல்லது கூடாது” என்று எந்த பதிலை சொன்னாலும் எதிர்ப்பு வரும். சனாதன தர்மத்தின் ஆணிவேர் பாரதம் என்றாலும், அது கப்பும் கிளையுமாக உலகம் பூரா பரவி, இப்போது கிளைகள் சின்னதானாலும், வேரின் இடம் மாராமல்தானே இருக்கிறது! ஸ்ரீமடம் எப்போதும் சாஸ்திர விரோதமான கார்யத்துக்கு துணை போகாது! ஆனால், எதிர்ப்பு எல்லா இடத்திலும் எல்லாக் காலத்திலும் இருக்கும்தானே! ஆனால், என்ன தர்மசங்கடமான நிலைமையும், தர்மதேவதையான பெரியவாளிடம் தன் வாலை சுருட்டிக் கொண்டுவிடுமே!
பக்தரின் கேள்விக்கு நேரடியாக எந்த பதிலும் வரவில்லை. “ஒனக்கு எத்தனை கொழந்தேள்?…”
சளைத்தவரில்லை அந்த உண்மையான பக்தர்…”பெரியவங்க க்ருபையால, மூணு பொண்ணுங்களை பெத்திருக்கேன்….மூணும் சின்னக் கொழந்தைங்க…..அஞ்சு வயசு, மூணு வயசு, கடேசி ஆறு மாசம்……”
“ரொம்ப சரி. ஒரு பொண்ணுக்கு காயத்ரீ…ன்னு பேர் வை! இன்னொண்ணுக்கு சந்த்யா; மூணாவது ஸாவித்ரி! முக்யமா ஒண்ணு கேட்டுக்கோ! மூணு பொண்களையும் அழகா அந்தந்த முழுப்பேரையுமே சொல்லிக் கூப்டு! பேபி…லில்லி….பில்லி…ன்னெல்லாம் கூப்டாதே!……புரிஞ்சுதா? இப்டி, காயத்ரீ, சந்த்யா, ஸாவித்ரீ….ன்னு சொல்லிண்டிருந்தாலே, காயத்ரி ஜபம் பண்ணின புண்யம் ஒனக்கு கெடைச்சுடும்! க்ஷேமமா இருங்கோ!”
பக்தரின் உள்ளும்,புறமும் ஆனந்தம் பொங்கியது. சம்பிரதாய விரோதமானது என்றாலும், அவருக்கு ஆசை. அதை பெரியவா வெகு அழகாக தீர்த்து வைத்துவிட்டார்!—————————
குழந்தைகளுக்கு பகவானின் நாமங்களை வைப்பதே அவர்களை கூப்பிடும் சாக்கில் நம் நாக்கிலும், வீட்டிலும் பகவானின் நாமம் ஒலிக்கும் என்பதால்தான். நாராயணன் என்பதை நாணா, நாணு…என்றோ, லக்ஷ்மி என்பதை லக்கு என்றோ, தண்டபாணி என்பதை தண்டு அல்லது பாணி என்றோ நம் பக்கத்தில் வழக்கத்தில் உள்ள ஒன்று. இனியாவது திருத்திக்கொள்ளுவோம்.
ஒரு வேளாள பக்தர் பெரியவாளிடம் கேட்டார் .”நான்…..காயத்ரி மந்த்ரம் சொல்லலாமா?
Popular Categories



