தங்கமே தங்கம்..! உலக அளவில் தங்கம் அதிகம் ஸ்டாக் வைத்திருப்பவர் தெரியுமா?!

Published:

GOLD 2 - 2026

தங்கம் விலை ஒரு பவுன் 30 ஆயிரம் ரூபாயில் அல்லாடிக் கொண்டிருக்கிறது. இது பெண்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ள தங்கம் விலை உயர்வு, முதலீட்டாளர் களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரம், தங்கம் தான் ஒரு நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையைக் காட்டும் என்பதால், உலக அளவில் தங்கம் தங்களிடம் அதிகமாக வைத்திருக்கும் நாடுகள் குறித்து பலரும் ஆர்வத்துடன் ஆராய்ந்து வருகிறார்கள்!

உலக அளவில் அதிக தங்கத்தை கையிருப்பு வைத்திருக்கும் நாடுகள்!

அதிக தங்கத்தை கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 10 வது இடத்தை பிடித்துள்ளது.

உலக தங்கக் கவுன்சிலில் சந்தை புலனாய்வு அமைப்பு இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, 8,134 டன் எடை கொண்ட தங்கத்துடன் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. 3,367 டன் தங்க கையிருப்புடன் ஜெர்மனி 2ஆம் இடமும், 2,451 டன் தங்கத்துடன் சர்வதேச நாணய நிதியம் 3ஆம் இடத்திலும் உள்ளன.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

இத்தாலி, பிரான்ஸ், ரஷ்யா, சீனா, சுவிட்சர்லாந்து, ஜப்பானை அடுத்து இந்தியா 618 டன் தங்க கையிருப்புடன் 10ஆம் இடத்தில் உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தை பட்டியலில் இருந்து நீக்கினால் இந்தியா 9ஆவது இடத்தில் இருக்கும்.

கடந்த ஜூலையில் இந்தியாவின் செய்த தங்கக் கொள்முதல் 13.1 டன் ஆகும். இது அதற்கு முந்தைய ஜூன் மாதத்தைக் காட்டிலும் 90 சதவீதமும், 2017 ஆகஸ்ட் முதலான கணக்கீட்டில் மாதத்தின் மிகக் குறைந்த கொள்முதல் என்றும் ஆய்வு மேற்கொண்ட அமைப்பின் இயக்குனர் அலிஸ்டெய்ர் ஹெவிட் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டாயிரமாவது ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் தங்க கையிருப்பு 357 டன். கடந்த மார்ச் மாதம் 607 டன் ஆக இருந்த தங்க கையிருப்பு தற்போது 618 டன்னாக அதிகரித்துள்ளது. 64 டன் தங்க கையிருப்புடன் பாகிஸ்தான் 45வது இடம் பிடித்துள்ளது.

Related articles

Recent articles

spot_img