பாடிக் கொண்டிருக்கும் போதே போன உயிர்! பிரபல பாடகரின் சோக முடிவு!

அடடே... அப்படியா? சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
singer - 2026

பிரபல பாடகர் பாடிக்கொண்டிருக்கும்போதே மேடையில் சரிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் மங்களூரைச் சேர்ந்தவர் பிரபல கொங்கனி இசையமைப்பாளர் ஜெர்ரி பஜோடி. இவர் ஒரு சிறந்த பாடகரும் கூட. இவருக்கு வயது 51.

ஜெர்ரி பஜோடி பல இசை நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒரு இசை நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருந்தார் அப்போது மேடையிலேயே மயங்கி சரிந்து விழுந்தார்.

அதன் பின்பு அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவனைக்கு அழைத்துச் சென்றனர். பின்பு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரியவித்தனர்.

தீடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்திருக்கிறார் எனவும் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறினர்.ஜெர்ரி பஜோடி 60 க்கும் மேற்பட்ட பாடல்ளுக்கு இசையமைத்துள்ளார். இவரது ‘நச் பங்காரா’ என்ற இசைத் தொகுப்பு கர்நாடகாவில் பலராலும் ரசிக்கப்பட்ட ஒன்று எனவும் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.