ஷேலா ரஷீத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்! லெப்டினன்ட் ஜெனரல் சதீஷ் துவா!

இந்தியா பொது தகவல்கள்
shela rashith - 2026

ஷேலா ரஷீத்தின் பொய்களை அம்பலப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் சதீஷ் துவா தெரிவித்துள்ளார்.

satish dua - 2026

மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் அம்மாநிலத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஷேலா ரஷீத் தமது ட்விட்டர் பக்கத்தில் ராணுவம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தார். குறிப்பாக ஜம்மு – காஷ்மீரில், மனித உரிமைகள் மீறப்படுகிறது.

ராணுவத்தினர் வீடு வீடாக வந்து அத்துமீறி சோதனையிடுகிறார்கள். விசாரணைக்காக வீட்டில் உள்ள ஆண்களை அழைத்து செல்கிறார்கள். அப்பாவிகளை ராணுவம் கொடூரமாக சித்திரவதை செய்வதாகவும் குறிப்பிட்டு இருந்தார். இதனை ராணுவம் திட்டவட்டமாக மறுத்து இருந்தது.

shehlarashid - 2026

இந்நிலையில் ராணுவத்தில் ஸ்ரீநகர் படைப்பிரிவில் காமாண்டராக பணியாற்றியவர் லெப்டினன்ட் ஜெனரல் சதீஷ் துவா. இவர் தற்போது ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் காஷ்மீர் தொடர்பாக ஷேலா ரஷீத் தொடர்ந்து பொய்களை பேசி வருவதாகவும் அவர் மீது சட்டத்தின் படி நடவடிக்கை எடுத்து அவரது பொய்களை அம்பலப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

satish dua 4 - 2026

இது தொடர்பாக அவர் கூறுகையில், “நான் அண்மைக்காலமாக ஷேலா ரஷீத்தின் டுவிட்டர் பதிவுகளை பார்த்து வருகிறேன். அவர் செய்து கொண்டிருப்பது முற்றிலும் தேசவிரோத செயலாகும். ராணுவம் ஷேலா ரஷீத்தின் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள போதிலும், மற்றுமொரு சரியான செயலை வேண்டியது அவசியம் ஆகும்.

satish dua 1 - 2026

ஐபிசி மற்றும் ஐடி சட்டங்கள் மூலம் நடவடிக்கை எடுத்து ஷேலா ரஷீத்தின் பொய்களை அம்பலத்த வேண்டும். நாம் பிரிவினைவாதிகள் விரும்புவதை சொல்ல அனுமதித்த காரணத்தால் நாம் நீண்ட காலமாகவே காஷ்மீர் தகவல் போரை இழந்துவிட்டாம். எனவே அவர்களை நாம் சம்மபந்தபட்ட சட்டங்களின் கீழ் நீதிமன்றத்திற்கு நாம் அழைத்துச் சென்று இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

shehla rashid - 2026

முன்னதாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர், அலக் அலோக் ஸ்ரீவத்சா என்பவர், தில்லி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, ஷேலா ரஷீத் மீது, தேச துரோகம், கலவரத்தை துாண்டுவது, நாட்டின் அமைதியை குலைப்பது உட்பட, பல்வேறு பிரிவுகளில், தில்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.