வெள்ளைக் கொடி தாங்கி வந்த பாகிஸ்தான்! சண்டையில் இறந்தவர் உடலை எடுத்து சென்றது!

இந்தியா உலகம்

pak - 2026

இந்திய எல்லையில் ராணுவத்தினருடனான தாக்குதலில் உயிரிழந்த இரு பாகிஸ்தான் வீரர்களின் உடல்களை வெள்ளைக் கொடியுடன் வந்து எடுத்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்திய எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களுக்கு இந்திய பாதுகாப்பு படையும் பதிலடி கொடுத்து வருகிறது.

கடந்த 10-ஆம் தேதி ஹாஜிபூர் செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் நுழைந்தது. பின்னர் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது.

10 பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவ செய்வதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் நம் இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இருவர் உயிரிழந்தனர்.

இறந்தவர்களின் உடலை எடுத்து செல்வதற்காக இந்திய எல்லையில் வெள்ளைக் கொடியுடன் வந்த பாகிஸ்தான் ராணுவம் அந்த உடல்களை எடுத்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.