பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த இளைஞர்! கோவையில் கைது!

Published:

pakitthan - 2026

பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகளிடம் தொடர்பில் இருந்ததாக, கோவையில் வங்கதேசத்தை சேர்ந்த இளைஞரை பிடித்து ஆர்.எஸ்.புரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை காந்தி பார்க் பகுதியில் நகைப்பட்டறையில் பணியாற்றி வந்தவர் வங்கதேச இளைஞர் ஃபாரூக் கௌஸீர். இவர் பாகிஸ்தான் முஜாஹுதீன் என்ற வாட்ஸ்ஆப் குழுவில் செயல்பட்டு வந்துள்ளார்.

அவர் தனது செல்ஃபோனை பழுதுபார்க்க எடுத்துச் சென்றபோது இத்தகவல் அம்பலமாகியுள்ளது. இதன் அடிப்படையில் கௌஸீரை கைது செய்த காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், துப்பாக்கி தொடர்பான தகவல்களை பரிமாறி இருப்பதும் தெரியவந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக வங்கதேசத்தைச் சேர்ந்த ஃபாரூக் கௌஸீர் வசித்து வந்துள்ளார். அவரிடம் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவையும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Related articles

Recent articles

spot_img