அமலாக்கத்துறை கார்த்திக் ஆடிட்டரிடம் தொடர் விசாரணை!

Published:

karthik 1 - 2026

கார்த்திக் சிதம்பரத்தின் ஆடிட்டரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தி வருகினறனர்.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் பாஸ்கர ராமனும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவரிடமும், இவரது மனைவி பத்மா பாஸ்கர ராமனிடமும் 18 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.

செப்.,19 ம் தேதியுடன் சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் முடிவடைவதால், சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு பாஸ்கர ராமனிடம் நடத்தப்படும் விசாரணை மிக முக்கியம் என அமலாக்கத்துறை கருதுகிறது.

சிதம்பரத்தின் உதவியாளர் பெருமாளிடம் விசாரணை நடந்த்து அதனைத் தொடர்ந்து, பாஸ்கர ராமனிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட பாஸ்கர ராமன் தற்போது ஜாமினில் வெளியில் இருக்கிறார்.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

Related articles

Recent articles

spot_img