சாயா வுக்கு காத்திருந்து சலித்த ஓபிஎஸ்! காருக்கே வந்து சப்ளை செய்த நாயர்!

சற்றுமுன்
car ops - 2026

தமிழகத்தில் எத்தனை டீ, காபி என்று ரகம் ரகமாக இருந்தாலும் கேரளா டீ போல வராது. கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வரும் பல பேர் டீக்கடை வைத்தே பிழைத்துக் கொள்கிறார்கள்.

தமிழர்கள் டீக்கடையில் இருக்கும் கூட்டத்தை விட, கேரள நபர்களின் கடையிலேயே கூட்டம் களைக்கட்டும். ஒரு முறை அதனை குடித்து விட்டால், அதற்கு அடிமையாகி விடுவோம். அப்படி அதுல என்ன தான் சேர்ப்பாங்களோ என்று நம்மில் பலர் நினைத்ததுண்டு.

அதே போலவே, தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ்க்கும் கேரள டீ குடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதனை பற்றி அதிமுகவின் இடுக்கி மாவட்ட தலைவரிடம் தெரிவித்திருந்தார்.

tea shop - 2026

இன்று சபரிமலையில் தரிசனம் செய்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த ஓ.பி.எஸ் வழக்கமாக டீ குடிக்கும் கடையை விட்டு தேக்கடி சென்றுள்ளார். அவர் அங்கு செல்வதை அறிந்த மக்கள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. அதில் பல மக்கள் ஓ.பி.எஸ் உடன் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்துள்ளனர்.

அதன் பின்னர் காரில் இருந்து இறங்கி அருகே இருந்த ஒரு கடையில் டீக்காக காத்திருந்துள்ளார். ஆனால், அந்த கடையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவருக்கு டீ கொடுக்க தாமதம் ஆகியுள்ளது. அதனால், ஓ.பி.எஸ் அங்கிருந்து டீக்குடிக்காமலேயே திரும்பி காருக்கு சென்றுள்ளார். இதனை அறிந்த டீக்கடைகாரர் காருக்கே வந்து டீயை கொடுத்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.