உச்ச நீதிமன்றத்துக்கு தமிழர் ஒருவர் நீதிபதியாக நியமனம்

Published:

v Ramasubramanian judge in Telangana HC and Himachal Pradesh HC - 2026

உச்ச நீதிமன்றத்திற்கு கிருஷ்ண முராரி, ரவீந்திர பட், தமிழகத்தை சேர்ந்த வி.ராமசுப்பிரமணியன், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் நீதிபதிகளாக நியமிக்கப் பட்டுள்ளனர்.

புதன்கிழமை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கிருஷ்ணா முராரி, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரவீந்திர பட், இமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வி ராமசுப்பிரமணியன் மற்றும் கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிருஷிகேஷ் ராய் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

4 நீதிபதிகள் நியமனங்களை அடுத்து, உச்ச நீதிமன்றம் 34 நீதிபதிகள் கொண்டமுழு பலத்துக்கு வந்துள்ளது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த உச்ச நீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) சட்டத்தின் மூலம் அனுமதிக்கப்பட்ட பலம் இந்திய தலைமை நீதிபதியைத் தவிர 30 முதல் 33 ஆக உயர்த்தப்பட்டது. நான்கு நீதிபதிகள் அடுத்த வாரத்திற்குள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் முன் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

ஆகஸ்ட் 28 ஆம் தேதி உச்ச நீதிமன்ற கொலீஜியம் நான்கு நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரைத்தது. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் அகில இந்திய பணி மூப்பு பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் நீதிபதி கிருஷ்ணா முராரி 2004 இல் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு 2018 ஜூன் மாதம் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உயர்த்தப்பட்டார்.

ramnath khovind - 2026

அகில இந்திய சீனியாரிட்டி பட்டியலில் 12 வது இடத்தில் இருக்கும் நீதிபதி ரவீந்திர பட் 2004 ல் தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு 2018 மே மாதம் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உயர்த்தப்பட்டார்.

அகில இந்திய சீனியாரிட்டி பட்டியலில் 42 வது இடத்தில் இருக்கும் நீதிபதி ராமசுப்பிரமணியன் 2006ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு ஜூன் மாதம் இமாச்சல பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உயர்த்தப்பட்டார். முன்னதாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஆர் பானுமதி, மூத்தவர்கள் பட்டியலில் கவனிக்கப்படவில்லை என்ற அடிப்படையில் ராமசுப்பிரமணியனின் பதவி உயர்வுக்கு ஆட்சேபனை தெரிவித்தார்.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!
supremecourt - 2026

அகில இந்திய சீனியாரிட்டி பட்டியலில் 46 வது இடத்தில் இருக்கும் ஜஸ்டிஸ் ராய், 2006 இல் கௌஹாத்தி உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு, ஆகஸ்ட் 2018 இல் கேரள உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உயர்த்தப்பட்டார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், வரும் நவம்பரில் ஓய்வு பெறுகிறார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img