புது தில்லி: நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அவசர சட்டம் 5–ந்தேதியுடன் காலாவதி ஆவதால், மீண்டும் அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. நிலம் கையகப்படுத்த ஏற்கனவே அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதியில், இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக, நிலம் கையகப்படுத்தும் மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் பா.ஜனதா கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால், அங்கு இன்னும் நிறைவேறவில்லை. மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அக்கட்சிகளை சரிக்கட்டும் பொறுப்பை மூத்த அமைச்சர்களிடம் பா.ஜனதா ஒப்படைத்துள்ளது. எப்படியும், மாநிலங்களவையில் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்றி விடுவது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இதனிடையே, பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதி முடிவடைந்து, கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடரின் இரண்டாவது பாதி, ஏப்ரல் 20–ந்தேதி தொடங்குகிறது. இடைப்பட்ட காலத்தில், அதாவது ஏப்ரல் 5–ந்தேதியுடன், நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அவசர சட்டம் காலாவதி ஆகிறது. எனவே, அந்த அவசர சட்டத்தை மீண்டும் பிறப்பிப்பது என மத்திய அரசு நேற்று அதிகாரபூர்வமாக முடிவு செய்தது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இல்லத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர்சபை கமிட்டி கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
காலாவதியாகும் சட்டம்: கையைப் பிசையும் அரசு: மீண்டும் அவசரச் சட்ட முடிவு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari