நெட்டில் புகைப்படம் வெளியிடுவேன்..மிரட்டிய காதலன்! காதலி தற்கொலை!

இந்தியா கிரைம் நியூஸ்
tharkolai 1 - 2026

தில்லியில் காதலன் மிரட்டியதால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தில்லியில் தந்தையை இழந்த பெண் ஒருவர் தன் தாயோடு வசித்து வருகிறார். இவர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இடையில் ஏற்பட்ட ஏதோ பிரச்சனைக் காரணமாக காதலை முறித்துள்ளார். இதனால் கோபமான அந்த இளைஞர் அந்த பெண்ணிடம் தன்னைக் காதலிக்கும் படி வற்புறுத்தியுள்ளார்.

காதலிக்காவிட்டால் தன்னுடன் அந்த பெண் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் விரக்தியடைந்த அந்த பெண் தன் தாய் வீட்டில் இல்லாத பொழுது தன் தோழியுடன் இருக்கும்

சமயத்தில் தன்னுடைய தோழியை வீட்டுக்கு ஏதாவது உணவுப் பொருட்கள் வாங்கி வர சொல்லி வெளியே அனுப்பியுள்ளார். வெளியில் சென்று விட்டு வந்த அந்த தோழி கதவை தட்டிப்பார்த்தபோது கதவு திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அவர் அந்த பெண்ணின் தாய்க்கு அழைத்து சொல்லியுள்ளார். அதன் பின் அக்கம்பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து பார்த்தபோது அந்த பெண் தூக்குமாட்டித் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதனைக் கண்டவர்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். இதனையடுத்து அந்த இளைஞன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.