நாடு முழுவதும் திரையரங்குகளில் ஒவ்வொரு காட்சியும் தொடங்கும் முன் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. அப்போது அங்கிருக்கும் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தவும் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், தேசிய கீதம் இசைக்கப்படும்போது மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்கத் தேவையில்லை என புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அப்போது திரையரங்குகளின் கதவுகளை வெளிப்புறம் பூட்டத் தேவையில்லை என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.



