திரைப்படத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். திரைப்படத்துறையில் செய்த சாதனைகளுக்காக அமிதாப் பச்சனுக்கு விருது வழங்கப்படுகிறது என்று மத்திய அமைச்சர் பிராகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
76 வயதாகும் அமிதாப்பச்சன், 1969ம் ஆண்டில் சினிமா உலகில் அடியெடுத்து வைத்து தொடர்ந்து 40 ஆண்டுகளாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தாதா சாகேப் பால்கே விருதுக்கு அமிதாப் பச்சன் தேர்வு பெற்றுள்ளதற்கு சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



