7 தலை பாம்பு உறித்த சட்டை! அதனை வழிபட்ட மக்கள்!

Published:

7 head snake - 2026

பெங்களூரு அருகே உள்ளே கிராமம் ஒன்றில் ஏழு தலைப்பாம்பின் தோல் கிடப்பதாக கூறி அதை வழிபட மக்கள் கூட்டம் கூட்டமாக செல்லும் காட்சி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருக்கு அருகே உள்ள கனகபுரா என்ற ஊரின் அருகே மரிகவுடானா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் 7 தலைகள் கொண்ட நாகப்பாம்பு ஒன்று நீண்ட நாட்களாக வாழ்ந்து வருவதாக மக்கள் நம்பி வருகின்றனர்.

இந்நிலையில் சில நாட்கள் முன்பு அந்த கோவில் வளாகத்தை சுத்தம் செய்த ஒருவர் அங்கு பாம்பு தோல் ஒன்று கிடப்பதை கண்டுள்ளார்.

இதை உடனடியாக அந்த கிராமத்து மக்களிடம் சொல்ல, அது காட்டுத்தீ போல் பக்கத்து கிராமங்களுக்கும் பரவியுள்ளது. பலர் 7 தலைப்பாம்பின் தோலை வணங்குவதற்காக பல ஊர்களிலிருந்தும் வந்து கொண்டிருக்கிறார்கள்.

Related articles

Recent articles

spot_img