ஆரோக்கிய சமையல்: பிரெட் வித் பீட்ரூட் ஜாம்

Published:

bread - 2026

பிரெட் வித் பீட்ரூட் ஜாம்

தேவையானவை:

பீட்ரூட், தக்காளி – தலா ஒன்று,

ஏலக்காய்த் தூள் – ஒரு சிட்டிகை,

சர்க்கரை – ஒரு சிறிய கப்,

பிரெட் ஸ்லைஸ் – 6,

நெய் – 4 டீஸ்பூன்.

செய்முறை:

pitrute - 2026

பீட்ரூட்டை தோல் சீவி துருவவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். இரண்டையும் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைக்கவும். அடி கனமான வாணலியில் நெய்யை காயவிட்டு… அரைத்த பீட்ரூட் – தக்காளி விழுது, சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு சுருள கிளறி இறக்கினால்… ஜாம் ரெடி!

jam - 2026

பிரெட்டின் ஓரங்களை வெட்டி விட்டு, ஒரு பிரெட் ஸ்லைஸ் மீது தயாரித்து வைத்துள்ள ஜாமை தடவி, மேலே மற்றொரு பிரெட் ஸ்லைஸ் வைத்து மூடி பரிமாறவும்.

Related articles

Recent articles

spot_img