December 6, 2025, 5:15 AM
24.9 C
Chennai

எதிர்வீட்டு இளைஞருடன் மனைவியின் கள்ளக் காதல்: தனிமையில் இருந்த இருவரையும் கொன்ற கணவன்!

arival attack - 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் மனைவியையும் கள்ளக் காதலனையும் கையும் களவுமாக பிடிக்க, 3 செல்போன்களை இயக்கி, வீடியோ பதிவு செய்த கணவன், கள்ளக்காதலனின் தலையை துண்டாக வெட்டியதுடன், மனைவியையும் வெட்டிக் கொலை செய்து 14 கி.மீ. தொலைவுக்கு நடந்தே சென்று காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள புங்கவர் நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், 58 வயதான சண்முகம் – 45 வயதான மாரியம்மாள்! இந்த தம்பதிக்கு 2 மகள்கள், ஒரு மகன். மூத்த பெண்ணுக்கு திருமணமாகிவிட்டது. சண்முகம், மேளக் கலைஞர் என்பதால் அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று வருவார்; வேலையில்லாத நாட்களில் சென்னைக்கு கட்டடத் தொழிலில் வேலை செய்ய சென்று விடுவார்.

சண்முகத்தின் எதிர்வீட்டைச் சேர்ந்தவர் 28 வயதான ராமமூர்த்தி. ஊராட்சி மன்றத்தில் தண்ணீர் திறந்து விடும் பணிகளைச் செய்து வந்தார். மேலும், கட்டட வேலைக்கு செல்வது, வீடுகளில் ஏற்படும் மின்பழுதுகளை சரி செய்வது, ஊர் மக்களுக்கு உதவி செய்வது என பல வேலைகளில் ஈடுபட்டு வந்தார். கிராமத்தினருக்கு பல உதவிகளை செய்து வந்ததால் ராமமூர்த்திக்கு ஊரில் நல்ல பெயர் இருந்துள்ளது.

இந்நிலையில் சண்முகம் மனைவி மாரியம்மாளுக்கும் ராமமூர்த்திக்கும் இடையே நட்பு ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது; இருவரும் சண்முகம் இல்லாத வேளையில் வீட்டில் தனிமையில் இருந்துள்ளனர். இதை அறிந்த சண்முகம், இருவரையும் கண்டித்துள்ளார். இருவருமே அந்தக் குற்றச்சாட்டை மறுத்ததுடன், சாமி படங்களின் முன்னால் சூடம் கொளுத்தி சத்தியமும் செய்தனர். அதை நம்பிய சண்முகம் பிரச்னையை அத்துடன் விட்டு விட்டார்.

இருப்பினும், பின்னர் வங்கி உதவி எனக் கூறி இருவரும் ஒன்றாகச் சுற்றி வந்துள்ளனர். இதனால் மீண்டும் சண்முகம் குடும்பத்தில் பிரச்னை எழுந்துள்ளது. குடும்பப் பிரச்னை கிராம பஞ்சாயத்துக்கே வர, ராமமூர்த்தி நல்லவர் என்றும் கணவர்தான் தன் மீது சந்தேகப்படுவதாகவும் மாரியம்மாள் கூறியுள்ளார். இதனால் கிராமத்தினர் சண்முகத்தை சத்தம் போட்டுள்ளனர். மனமுடைந்த சண்முகம் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். பின்னர் அவர் மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சண்முகத்தின் மனதில் சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. தன்னை ஊர்ப் பஞ்சாயத்தில் அவமானப் படுத்தியதால், ஆதாரத்துடன் இவர்களின் கள்ளக்காதலை நிரூபிக்க முடிவு செய்தார். சென்னைக்குச் சென்றவர், நண்பர்களின் உதவியுடன் செல்போனில் திரில்லர் படங்களைப் பார்த்து, கேமராக்களைக் கையாள்வது குறித்து தெரிந்து கொண்டார்.

விலையுயர்ந்த 3 செல்போன்களை வாங்கிய சண்முகம், வீட்டுக்கு வந்து வீட்டின் நேரெதிரில் உள்ள சிறிய கூடாரத்தில் ஒன்றையும் வீட்டருகில், தெர்மாகோலில் ஒன்றையும் வீட்டினுள்ளே ஜன்னலில் ஒன்றையும் மறைத்து வைத்துள்ளார். சண்முகம் இல்லாத நேரங்களில் ராமமூர்த்தி வீட்டிற்கு வருவதும், இருவரும் உல்லாசமாக இருப்பதும் அந்த செல்போன்களில் பதிவாகின. அந்தக் காட்சிகளை ஊராரிடம் காட்டி கள்ளக் காதலர்களைத் தண்டிக்க வேண்டும் என சண்முகம் திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து உறங்கியுள்ளார் சண்முகம். நள்ளிரவு 1.30 மணி அளவில் வீட்டுக்குள் வந்த ராமமூர்த்தி, மாரியம்மாளுடன் தனிமையில் இருந்துள்ளார். திடீரென உறக்கம் கலைந்து எழுந்த சண்முகம், அதிகாலை 3 மணி அளவில் மனைவியும் ராமமூர்த்தியும் உல்லாசமாக இருந்துள்ளதைக் கண்டுள்ளார்.

இந்தக் காட்சியைக் கண்டு அதிர்ந்த சண்முகம், வெறி கொண்டவராக அங்கிருந்த அரிவாளை எடுத்து, ராமமூர்த்தியின் தலையை துண்டாக வெட்டிப் படுகொலை செய்தார். பயத்தில் பதுங்கி இருந்த மனைவி மாரியம்மாளையும் வெட்டிப் படுகொலை செய்தார். இருவரும் ரத்த வெள்ளத்தில் வீட்டில் சடலமாகக் கிடக்க, 14 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்தே சென்ற சண்முகம், பசுவந்தனை காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

ரத்தக் கறைகளுடன் வந்த சண்முகத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி நடந்ததைத் தெரிந்து கொண்டனர். பின்னர் காலையில் வீட்டிற்கு சென்று சடலங்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சண்முகம் அங்கங்கே மறைத்து வைத்திருந்த செல்போன்களையும் போலீசார் மீட்டனர். சண்முகம் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories