ராமஜன்ம பூமியில் கோயில் கட்ட… 3 மாதத்துக்குள் திட்டம் உருவாக்க வேண்டும்!

Published:

ayothi 1 - 2026

ராமஜன்மபூமியில் ராமர் கோவில் கட்ட 3 மாதத்திற்குள் திட்டம் உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

சர்ச்சைக்குரிய நிலம் என்று கூறப்பட்டு வந்த நிலத்தை, உச்ச நீதிமன்றம் ஹிந்துக்கள் கையில் ஒப்படைத்துள்ளது. அந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. சன்னி வக்ஃபு வாரியம், மற்றும் நிர்மோஹி அகாரா ஆகியவற்றின் மனுக்கள் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளன. இந்த வழக்கில், ராம்லல்லா அமைப்பின் மனு மட்டுமே ஏற்கக் கூடியதாக இருந்தது என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

இஸ்லாமியர்களுக்கு, மசூதி கட்டிக் கொள்ள வேறு இடம் வழங்கப் பட வேண்டும் என்றும், அதனை இஸ்லாமியர்கள் தரப்பு ஏற்க வேண்டும் என்றும் கூறியுள்ளது உச்ச நீதிமன்றம்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மேலும் சில முக்கிய அம்சங்கள்!

ராமஜன்மபூமியில் ராமர் கோவில் கட்ட, 3 மாதத்துக்குள் திட்டம் உருவாக்க அறக்கட்டளை ஒன்று உருவாக்கப் பட வேண்டும். மத்திய அரசு ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளையை அமைக்க வேண்டும்.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

முஸ்லிம்களுக்கு மட்டுமே உரித்தான இடம் என்பதற்கான ஆதாரமும் இல்லை. வெளிப்பகுதி இந்துக்களின் கட்டுப்பாடில்தான் இருந்துள்ளது!

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இருதரப்பினரும் வழிபாடு நடத்தி உள்ளனர்!

அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தவறானது!அயோத்தி கோவில் இடம் அரசுக்கு சொந்தமானது. அலகாபாத் நீதிமன்றம் 2.77 நிலத்தை மூன்றாக பிரித்து கொடுத்தது தவறு!

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை மத்திய அரசே வைத்துக் கொள்ளவேண்டும்!

அயோத்தியில் இஸ்லாமியர்கள் மாற்று இடத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களுடையது என்று முஸ்லீம் அமைப்பால் நிரூபிக்க முடியவில்லை! இஸ்லாமியர்களுக்கு தகுந்த இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கலாம்! – இவ்வாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img