அயோத்தி தீர்ப்பு: சோஷியல் மீடியா பயனாளர்களுக்கு எச்சரிக்கை!

இந்தியா பொது தகவல்கள்
ayodhya - 2026

பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தீர்ப்பு தொடர்பாக ஆதரவாகவோ, அல்லது எதிர்ப்பு தெரிவித்தோ கருத்து பதிவிட்டால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அயோத்தி தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகவுள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் அரவிந்தன் ஐபிஎஸ் வலைதளவாசிகளுக்கு சில ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.

‘கலவரத்தை தூண்டும் வகையில் கருத்துக்கள் பதிவிட கூடாது. அதையும் மீறி பதிவிட்டால் சட்ட நடவடிக்கை பாயும். பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வரும் வகையில் எந்த செய்தியையும் பகிர கூடாது. உறுதி செய்யப்பட்ட செய்திகளை மட்டும் பகிர வேண்டும். வாட் அப் அட்மின்கள், குழுவில் அட்மின்கள் மட்டும் பதிவிடும் வகையில் வைத்து கொள்ளுங்கள். அனைவரும் இணைந்து பொது அமைதியை நிலைநாட்டுவோம்.’ என்று அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.