December 5, 2025, 6:05 PM
26.7 C
Chennai

ஆவணப்படி அயோத்தி நிலம் அரசுக்கு உரியது: தலைமை நீதிபதி

ayodhya judges - 2025

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமர்வு தீர்ப்பை வாசித்து வருகிறது.

இந்த வழக்கில் தொல்லியல் துறை மிக முக்கியமான அமைப்பு என்று கருத்து தெரிவிக்கப் பட்டுள்ளது! இந்த கட்டட அமைப்பு எந்த விதத்திலும் இஸ்லாமிய கட்டுமான அமைப்பில் இல்லை என்பதை தெளிவு படுத்தி இருக்கிறார் நீதிபதி!

பாபர் மசூதி, பாபர் ஆட்சி காலத்தில் தான் கட்டப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்கிறோம் என்பதை ரஞ்சன் கோகோய் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட நிர்மோகி அகாராவின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது

மசூதிக்கு கீழ் இருந்ததாக கூறப்படும் கட்டடம் இஸ்லாமிய முறையிலான கட்டடம் இல்லை என்பதை தொல்லியல் துறை கூறியுள்ளது; ராமர் தொடர்பான இந்துக்களின் நம்பிக்கை விவாதம் மற்றும் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது

அயோத்தியில் ராமர் பிறந்தார் என்பது இந்துக்களின் மிக உயரிய நம்பிக்கை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது!

ராமர் அயோத்தியில் பிறந்தார் என்கிற இந்துக்களின் நம்பிக்கையை சந்தேகத்திற்கு உட்படுத்த முடியாது என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது!

கடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் நிலத்திற்கு உரிமையாளர் யார் என்பதை தீர்மானிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது

மசூதியில் இருந்ததாக கூறப்படும் கட்டடம் இஸ்லாமிய முறையிலான கட்டடம் இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது தொல்லியல் துறை! அதையே உச்சநீதிமன்றமும் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது! அதேபோல் இந்த வழக்கில் நிலத்துக்கு உரிமை கொண்டாடிய நிர்மோகி அகாரா வின் நிராகரிக்கப்பட்டுள்ளது!

இந்திய தொல்லியல் துறை கொடுத்துள்ள ஆதாரங்கள் ஆராயப்பட்டன! காலியான மனையில் பாபர் மசூதி கட்டப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது!

அந்த இடத்தில் கோவில் இருந்ததாக தொல்லியல் துறை கூறியுள்ளது! 12 ஆவது நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் ஒன்று அந்த இடத்தில் இருந்ததாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. 12-16 ஆம் நூற்றாண்டிற்கு இடையே சர்ச்சைக்குரிய இடத்தில் என்ன இருந்தது என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் எதுவும் இல்லை

12 ஆவது நூற்றாண்டில் இருந்ததாக கூறும் கோயிலின் அமைப்பு குறித்து தொல்லியல் துறை சரியான விளக்கம் அளிக்கவில்லை!

சட்டத்தின் அடிப்படையில்தான் நிலத்திற்கு உரிமை கோரும் வழக்கு தீர்வு காண முடியும் என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது! கடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் நிலத்துக்கு உரிமையாளர் யார் என்பதை தீர்மானிக்க முடியாது!

அயோத்தி வழக்கு தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

வரலாறு மதம் சட்டம் என பலவற்றை அயோத்தி வழக்கு கடந்தது

ஒரு மதத்தினரின் நம்பிக்கை, மற்ற மத நம்பிக்கை தடுப்பதாக இருக்கக்கூடாது

இறை நம்பிக்கைக்குள் செல்வது தேவையற்றது

பாபர் மசூதி பாபர் ஆட்சி காலத்தில் தான் கட்டப்பட்டது என்பதை ஏற்று கொள்கிறோம்

பாபர் மசூதி எப்போது கட்டப்பட்டது என்பதற்கு துல்லியமான ஆதாரம் இல்லை

மதச்சார்பின்மையே அரசியல் சாசனத்தின் அடிப்படை பண்பு

நிர்மோகி அஹாரா மனுவில் ஆதாரங்கள் இருப்பதாக தெரியவில்லை. விசாரணைக்குஉகந்தது இல்லை

அமைதியை காக்கவும் பாதுகாப்பை பராமரிக்கும் வகையில் அயோத்தி தீர்ப்பை ஏற்று கொள்ள வேண்டும்

நீதிமன்றம் நடுநிலையை காக்கும் பொறுப்பில் இருக்கிறது

காலி இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை.

இந்திய தொல்லியல் துறை கொடுத்துள்ள ஆதாரங்கள் ஆராயப்பட்டன

12வது நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் இருந்ததாக இந்திய தொல்லியல் துறை கூறுகிறது

தொல்லியல் துறை ஆய்வறிக்கையை நிராகரிக்க முடியாது

ராமர் நம்பிக்கை கேள்விக்கு இடமில்லை

அயோத்தியில், ராமர் பிறந்த இடமாக ஹிந்துக்கள் நம்பிக்கை

ராமர் தொடர்பான ஹிந்துக்களின் நம்பிக்கை, சர்ச்சை மற்றும் விவாதத்திற்கு அப்பாற்பட்டது

சட்டத்தின் அடிப்படையில் தான் நிலத்திற்கு உரிமை கோர முடியும்

ஆவணப்படி அயோத்தி நிலம் அரசுக்கே சொந்தமானது.

மத நம்பிக்கை என்பது குடிமகனின் அடிப்படை உரிமை

சர்ச்சை கட்டடம் இஸ்லாமிய முறையில் இல்லை.

அயோத்தியில் பாபர் தளபதியால் மசூதி கட்டப்பட்டதை நீதிமன்றம் ஏற்று கொள்கிறது

அமைதியைக் காக்கும் வகையிலும் பாதுகாப்பை பராமரிக்கும் வகையிலும் நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்

அரசியலுக்கு அப்பாற்பட்டு சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும்.

ஒரு பிரிவினரின் நம்பிக்கையை மறு பிரிவினர் மறுக்க முடியாது

அமைதியைக் காக்கும் வகையிலும் பாதுகாப்பை பராமரிக்கும் வகையிலும் நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்

பாபர் மசூதி எப்போது கட்டப்பட்டது என்பதற்கான துல்லியமான ஆதாரம் இல்லை

தொல்லியல் துறை ஆதாரங்களை புறக்கணிக்க முடியாது

மசூதிக்கு கீழ் இருந்தது எந்த வழிபாட்டுத்தலம் என்பதை தொல்லியல் துறை குறிப்பிட்டு சொல்லவில்லை

மசூதிக்கு கீழ் இருந்தது இசுலாமிய கட்டிடம் அல்ல

அயோத்தி வழக்கில் நடுநிலைமை காக்கப்படும்

இந்த வழக்கில் தொல்லியல் துறையின் அறிக்கையை நிராகரிக்க முடியாது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories