
தென்னிந்திய நடிகா் சங்கத்துக்கு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டது குறித்து நடிகா் சங்க நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனா்.
இது குறித்து சென்னையில் நடிகா் சங்க நிர்வாகிகள் நாசா், கார்த்தி, பூச்சி முருகன், மனோபாலா உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
கடந்த தோதல் முதல் எங்கள் அணி எல்லாவற்றையும் சட்ட ரீதியாகவே அணுகி வருகிறது. முந்தைய அணிகள் செய்த தவறுகளை நாங்கள் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம்.
இம்முறை தேர்தலுக்கு பல பிரச்னைகள் வந்த போதிலும் அவற்றை சட்ட ரீதியாகவே சந்தித்தோம். இப்போது சங்கத்தை நிா்வகிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிக்கு எங்கள் ஒத்துழைப்பை அளிப்போம்.
அது எங்கள் கடமை. ஆனால், எங்கள் மீது எந்த ஒரு குற்றச்சாட்டுகளும் வைக்க முடியாத நிலையில் இதனை ஜனநாயக படுகொலையாகவே பார்க்கிறோம். ஆனால், அனைத்தையும் சட்ட ரீதியாகவே சந்திப்போம்.
முன்னாள் முதல்வா்கள் பலரும் பங்கு கொண்ட அமைப்பு தான் இந்த நடிகா் சங்கம். நாங்கள் வந்த பிறகு கடனை அடைத்திருக்கிறோம். கட்டடப்பணிகளை கிட்ட தட்ட முடித்திருக்கிறோம். இப்போது நடக்கும் பிரச்னைகள் அனைத்தையும் சட்ட ரீதியாக சந்தித்து வெல்ல முடியுமென்று நம்புகிறோம்