அயோத்தி: 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பு! ஷியா வாரியத்தின் மேல்முறையீடு தள்ளுபடி!

Published:

supreme court of india - 2026

ஷியா வாரியத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகளும் ஒரே தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

இந்த வழக்கில் ஷியா வாரியம் தன்னை இணைத்துக் கொண்டது; அதன் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப் படுவதாக தலைமை நீதிபதி அறிவித்தார்.

அயோத்தி தீர்ப்பு தொடர்பாக ஐந்து நீதிபதிகளுக்கு இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றும், அயோத்தி நிலத்திற்கு உரிமை கோரி தாக்கல் செய்த ஷியா வாரியம் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

அயோத்தி தீர்ப்பு தொடர்பில், தீர்ப்பினை வாசிப்பதற்கு தலைமை நீதிபதி அரை மணி நேரம் எடுத்துக் கொள்வார் என்று கூறப்பட்டது.

வரலாறு மதம் சட்டம் என பலவற்றைக் கடந்து அயோத்தி வழக்கில் உண்மை பயணித்துள்ளது என்று தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்!

ayodhya judges - 2026

முன்னதாக, அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் நிலையில் சமூக வலைதளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. சமூக ஊடகங்களில் பதற்றத்தை உருவாக்கும் தகவல்கள் பரப்பப்படுகிறதா என்பதை காவல்துறை அதிகாரிகள் கணிகாணித்து வருகின்றனர். சமூக வலைதளங்களை கண்காணிக்க சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

Related articles

Recent articles

spot_img