
பிரதமர் மோடியை மீண்டும் தனது ட்விட்டர் பதிவில் கடுமையாக விமர்சித்திருக்கிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்.
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டார் பிரதமர் மோடி. நாட்டில் ஊழல், கறுப்புப் பணம் உள்ளிட்டவற்றை ஒழிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை என்றும் அறிவித்தார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு நேற்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்தது என்பதால் இந்நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
சமீபமாக தொடர்ச்சியாக பாஜகவைக் கடுமையாக விமர்சித்து வருபவர் நடிகர் பிரகாஷ்ராஜ். நேற்று (நவம்பர் 8) பண மதிப்பிழப்பு தொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் விமர்சனத்தை வைத்துள்ளார். இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில், “கிடுகிடுவென உயரும் விலைவாசி… வேலையில்லாத் திண்டாட்டம்… வங்கி மோசடிகள்… பயமுறுத்தும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை… கும்பல் கொலைகள்… பதவி வெறி… அடக்குமுறைகள்..
ஆனால்… ஆனால்… ஆனால்… தயவுசெய்து காத்திருக்கவும்.. மாபெரும் தலைவர் உறுதியளித்திருக்கிறார். 2020 ஆம் ஆண்டு இந்திய நாடு மாபெரும் வல்லரசாகி விடும். இன்னும் 2 மாதங்களே உள்ளன… நாம் கொண்டாடக் காத்திருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார் பிரகாஷ்ராஜ்.
Shooting prices..no jobs..agrarian crisis..bank scams..haunting demonetisation..lynchings..poaching for power..curfews..BUT..BUT..BUT please wait????????SUPREME LEADER has promised …INDIA will be SUPER POWER IN 2020…..just TWO MONTHS TO GO..shall we wait to celebrate #justasking pic.twitter.com/d7B8ffu4Op
— Prakash Raj (@prakashraaj) November 8, 2019