“நாம் தான் நில ஆக்ரமிப்பாளர்கள்”-பெரியவா)

“முகாமில், ஒரு தாய்ப்பன்றி,ஏழெட்டுக் குட்டிகளுடன்உள்ளே நுழைந்து விட்டது. வெகு சுவாதீனமாக”.

“(“அவற்றை விரட்ட வேண்டாம். இந்த இடம் முன்னர் ஆடு,பன்றிகள் வசித்துக் கொண்டிருந்த இடம் .அவற்றை விரட்டி விட்டு, நமக்குக் கொட்டகை போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். நாம் தான் நில ஆக்ரமிப்பாளர்கள்”-பெரியவா)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-180
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்

ஆந்திர மாநிலத்தில் யாத்திரை.ஒரு குக்கிராமத்தில்முகாம்.

பின் தங்கிய மக்களே வசித்து வந்த ஒரேயொரு தெரு. எனவே சற்றுத் தள்ளினாற்போல்,கிராம மக்கள் ஒரு கீற்றுக் கொட்டகை போட்டுத் தந்திருந்தார்கள். கொட்டகை முழுவதும் பசுஞ்சாணி தெளித்து சுத்தம் செய்திருந்தார்கள். ஒரு மூலையில் மகாப் பெரியவாளுக்கு தனி இடம். கொட்டகைக்கு வெளியே நின்று கிராமத்தாருடன் சம்பாஷித்து விட்டு, சிப்பந்திகள் எல்லாரும் உள்ளே நுழைந்த போது, ஒரு தாய்ப்பன்றி ,ஏழெட்டுக் குட்டிகளுடன் உள்ளே நுழைந்து விட்டது. வெகு சுவாதீனமாக.

சிப்பந்திகள் கற்களை வீசி எறிந்தார்கள்…..

‘சூ…..சூ..போ…போ…என்று.. (பீஜாக்ஷர மந்திரங்கள் போல் ஒற்றைச் சொற்களை இரைந்து சொன்னார்கள்)

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.01 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

ஊஹூம்,பெரியதாக இருந்த தாய்ப்பன்றி அசையவேயில்லை. பயப்படவேயில்லை என்றால் குட்டிகளோ ஆனந்தமாக அட்டகாசம் செய்து கொண்டு,தாயின் மேல் விழுந்து புரண்டன.

பெரியவாள் சிப்பந்திகளை அழைத்தார்கள்.

“அவற்றை விரட்ட வேண்டாம். இந்த இடம் முன்னர் ஆடு, பன்றிகள் வசித்துக் கொண்டிருந்த இடம். அவற்றை விரட்டி விட்டு, நமக்குக் கொட்டகை போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். நாம் தான் நில ஆக்ரமிப்பாளர்கள். பகவான் ‘வராஹ அவதாரம்’ செய்து பூமியை  ரட்சத்திருக்கிறார். அம்பாளின் அம்சமாக வாராஹி தோன்றியிருக்கிறாள். தெய்வங்களைப் பூஜை செய்கிற நாமே, அவற்றை விரட்டியடித்தால் எப்படி? அதுகள் தானாகப் போகிற போது போகட்டும்.பகவானைப் பிரார்த்தனை பண்ணிக்கொண்டு இந்தப் பக்கமா உட்கார்ந்திருப்போம்..”

கொஞ்ச நேரம் கழித்து, அந்த நாற்கால் பிராணிகள், நாலுகால் பாய்ச்சலில் வெளியேறிவிட்டன.

மறுபடியும் ‘அந்த இடத்தில் தண்ணீர் தெளித்து,சுத்தம் செய்து சிப்பந்திகள் அலுவல்களைத் தொடங்கினார்கள்.

பெரியவாள், கண்களை மூடிக் கொண்டு ஜபம் செய்து கொண்டிருந்தார்கள்.

வராக ஸ்தோத்திரமாக இருக்குமோ? வாராஹி மந்திரமாக இருக்குமோ?

சந்திரமௌளீஸ்வரருக்குத்தான் தெரியும்!

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 27 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

Topics

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Entertainment News

Popular Categories