சிவசேனா முடிவை எதிர்த்து எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த ரமேஷ் சோலங்கிக்கு குவியும் பாராட்டு!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
ramesh solangi - 2026

காங்கிரசுடன் இணைந்து பணியாற்ற என்னுடைய கொள்கை(Ideology) என்னை அனுமதிக்க மறுக்கின்றது… என்று கூறி, தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் சோலாங்கி! அவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக சமூக ஊடகங்களில், சிவசேனையின் முடிவால் அதிர்ச்சி அடைந்துள்ள தீவிர இந்துத்துவ சிந்தனைகளில் மூழ்கிய பலரும் தங்கள் வாழ்த்தையும் பாராட்டையும் ரமேஷ் சோலங்கிக்கு தெரிவித்து வருகின்றனர்.

பாலாசாகேப் பால்தாக்கரேவின் கீழ் எனது பயணம் 1992ல் தொடங்கியது. 12 வயது இருக்கும் போது சிவசேனா வில் இணைய வேண்டும் என மனதால் என்னை தயார் படுத்தி க்கொண்டே வளர்ந்தேன். ஆனால் முறையாக 1998ல் தான் சிவசேனாவில் இணைந்தேன்.

அன்றிலிருந்து பல்வேறு பொறுப்புகளையும் பதவிகளையும் வகித்து பாலாசாகேப் அவர்களின் இந்துத்துவ கொள்கையை பின்பற்றி பணியாற்றி வந்துள்ளேன். பல ஏற்ற இறக்கங்கள் உண்டு! இந்து ராஷ்ட்ரா, காங்கிரஸ் இல்லாத பாரதம் (காங்கிரஸ் முஃப்த் பாரத்) என்ற ஒரே கனவுடனும் இலக்குடனும் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன், சட்டமன்றத் தேர்தல், மக்களவைத் தேர்தல் என பல கட்ட தேர்தலில் போட்டியிட்டுள்ளேன்.

எனது 21 வருட பயணத்தில் பதவி, பொறுப்பு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு என எதற்கும் நான் கோரிக்கை வைத்தது இல்லை. இரவு பகல் என அனைத்து நேரங்களிலும் கட்சித் தலைமையின் கட்டளைக்கு இணைந்து பணிசெய்து வந்துள்ளேன்.

இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து மஹாராஷ்டிரா-வில் ஆட்சியமைக்கும் அரசியல் முடிவை சிவசேனா எடுத்துள்ளது. வாழ்த்துக்கள்!

ஆனால் என்னுடைய மனசாட்சியும், கொள்கையும் காங்கிரஸுவுடன் இணைந்து பணியாற்ற அனுமதிக்காது! பாதி மனதுடன் என்னால் பணியாற்ற முடியாது. எனவே கனத்த மனதுடன் என் வாழ்க்கையின் முக்கிய முடிவு எடுத்துள்ளேன்.

நான் என்னுடைய MLA பதவியை ராஜினாமா செய்வதுடன் கட்சியில் இருந்து வெளியேறுகின்றேன்.

  • ரமேஷ் சோலான்கி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.