
லிஸ்ட் எடுத்து யாராவது நியூஸ் பண்ணுங்கய்யா..
நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துவிட்டால் உடனே அந்த பிள்ளையின் படிப்பு செலவை நான் ஏற்றுக்கொள் கிறேன் என்று அரசியல் தலைவர்கள்… பிரபலங்கள், நடிகர்கள் என அம்புட்டு அக்கப்போர் பண்ணுகிறார்கள்.. விளம்பரம் செமையோ செமை..
நமக்கு பல சந்தேகங்கள்.. பொதுவா ஏழ்மையில் உள்ள மாணவ மாணவியருக்கு புத்தகம், கல்விக் கட்டணம்னு பல பேரு உதவிக் கிட்டு இருக்காங்க.. அந்த டைமுக்கு என்ன முடியுமோ அதை செய்து உதவுவதோடு நிறுத்திக் கொள்பவர்கள்தான் அதிகம்..
சிலர் கணிமான அளவில் நிதி ஆதாரத்தை ஏற்படுத்தி வைத்து அறக்கட்டளைகள் மூலம் தொடர்ந்து உதவுவார்கள்.. ஆனால் இந்த திடீரென முளைத்து, முழு படிப்புச் செலவையும் ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்பவர்கள் விஷயத்தில்தான் ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருக்கிறது..
அந்த பிள்ளை விருப்பப்பட்ட பள்ளி அல்லது கல்லூரியில, விருப்பப்பட்ட பாடப் பிரிவை படிக்க இவங்க சம்மதிப்பாங்களா? இல்லை நான் செய்யற செலவுக்கு ஏத்தா மாதிரிதான் நீ படிக்கணும்னு கண்டிஷன் போடுவாங்களா?
அந்த புள்ளை படிச்சி முடியறவரைக்கும் இவங்களுக்கு ஒரே மாதிரி பொருளாதார நிலை இருக்கும்ன்றதுக்கும், உதவுகிற மனநிலை அதே உள்ளன்போடு தொடரும்ன் றதுக்கும் என்ன கியாரண்ட்டி?
கடந்த பத்து வருஷத்துல, படிப்பு செலவை ஏத்துக்க றேன்னு சொன்னவங்க லிஸ்ட்டை எடுத்து அவங்க சொன்னமாதிரி நடந்துக்கிறாங்களான்னு யாராவது நியூஸ் பண்ணுங்கய்யா? தொல்லை தாங்க முடியலை..
உதவனும்னா ஒரு கணிசமான் அமௌண்ட்டை பிக்செட் டெபாசிட்டா அந்த பிள்ளை பேர்ல பேங்க்ல போட்டு அதுல வர்ற வட்டியில படிப்பு செலவுக்கு பாதுகாப்பா வழி ஏற்படுத்திக்கொடுத்துட்டு போய்கிட்டே இருக்கணும்..
நமக்கு தெரிஞ்சி, இயலாமையில் உள்ள குழந்தை களை, இளைய தலைமுறை யினரை படிக்க வைக்கும் பல தர்மவான்கள் வெளியே சொல்லுவதில்லை..
படிக்க வைப்பதாக சொன்ன பிரபலங்கள் சொன்ன சொல்ல காப்பாற்றி வருகிறார்கள் எனபதற்கான எந்த நிகழ்வுகளையும் வெளியே காண முடிவதில்லை..
சொன்ன சொல்ல காப்பாத்தறவங்க பத்தி விவரம் கிடைச்சா நாமும் பாராட்டலாம் இல்லையா? அதான்..
கருத்து: ஏழுமலை வேங்கடேசன் (ஊடகவியலாளர்)



