வீறாப்பு பேசிய சிதம்பரம்; வெச்சி செஞ்ச அமலாக்கத் துறை! வாயை வெச்சுகிட்டு சும்மா இருந்தாதானே..!

இந்தியா சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல் வணிகம்
swami chidambaram - 2026

தனக்கும் ஐ.என்.எக்ஸ் மீடியா நிதி முறைகேட்டு வழக்கிற்கும் தொடர்பாக ஒரே ஒரு ஆதாரத்தையாவது காட்டும்படி ப.சிதம்பரம் அமலாக்கப்பிரிவின் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டினார். தம் மீது அமலாக்கத்துறை வேண்டுமென்றே வழக்கு தொடுப்பதாக அவர் கூறினார்.

இதை அடுத்து.. ப.சிதம்பரத்தின் 12 வெளிநாட்டு வங்கிக் கணக்குகளையும் அதன் மூலம் வாங்கிய 16 சொத்துகள் பற்றிய விவரங்களையும் சீலிட்ட கவரில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது அமலாக்கப் பிரிவு..!

இது குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த ப.சிதம்பரம், தனது சார்பில் தன் குடும்பத்தார் இந்த டிவிட்டர் பதிவிடுகின்றனர் என்ற பொறுப்பாகாமை அறிவிப்பு – டிஸ்க்ளெய்மருடன், பதிவு செய்தது…

இதனிடையே, பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமிக்கும் ப.சிதம்பரத்துக்கும் இடையிலான சங்கேத மொழியில் சிலர் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே, படா சோர், பேட்டா சோர் என அப்பன் திருடன், மகன் திருடன் என்ற சங்கேத வார்த்தைகளால் சுப்பிரமணியன் சுவாமி அடிக்கடி குறிப்பிடுவார்.

இந்த நிலையில், சிதம்பரத்துக்கு எப்படி செல்போன் கிடைக்கிறது, யார் இவரது தகவலை கொண்டு சேர்ப்பது, எப்படி கம்யூனிகேஷன் நடக்கிறது என்பதை எல்லாம் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கைகளை பலரும் டிவிட்டர் பக்கத்தில் முன்வைக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.