என்கவுண்டர் போலீஸார் மீது ரோஜாப் பூக்களைத் தூவி பொதுமக்கள் பாராட்டு!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
encounter police flower1 - 2026

பெண் கால்நடை மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கொல்லப்பட்ட இடத்தில் காவல்துறையினர் மீது உள்ளூர் மக்கள் ரோஜா இதழ்களை பொழிந்தனர்.

பெண் டாக்டரை கொன்ற குற்றவாளிகளை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதற்காக போலீசார் மீது ரோஜாப் பூக்களை தூவி மக்கள் அவர்களுக்கு ஆதரவாக கோஷம் போட்டனர்.

பெண் டாக்டரை பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற குற்றவாளிகள் 4 பேர், போலீஸாரின் துப்பாக்கியப் பறித்து மிரட்டி தப்ப முயன்ற போது, போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் உயரதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர்.

இதனிடையே, என்கவுன்டர் குறித்த தகவல் அறிந்து, பொது மக்களும் அங்கு குவிந்துள்ளனர். இதற்காக, பொது மக்கள் போலீசார் மீது பூக்களை தூவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், போலீசாருக்கு ஆதரவாக கோஷம் போட்டனர்.

encounter police flower - 2026

”டிசிபி ஜிந்தாபாத்”, ”ஏசிபி ஜிந்தாபாத்” என கோஷம் போட்டனர். தொடர்ந்து போலீசாரைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடினர்.

இன்று காலை கல்லூரிக்கு பேருந்தில் சென்ற கல்லூரி மாணவிகள் இந்த என்கவுன்டர் குறித்த தகவல் அறிந்தது, போலீசாரை நோக்கி, ஆதரவாக கோஷமிட்டு தங்களது ஆதரவையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தினர். போலீஸாரை நோக்கி கையசைத்து தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

முன்னதாக, கடந்த வாரம் போலீஸார் தங்கள் புகாரை உடனடியாகப் பெற்று களத்தில் இறங்கியிருந்தால், இந்தப் படுகொலைச் சம்பவத்தை தவிர்த்திருக்கலாம் என்று திசாவின் பெற்றோர் கூறினர். அதைக் கேட்டு போலீஸாரை பொதுமக்கள் திட்டித் தீர்த்தனர். தொடர்ந்து, சைபராபாத் காவல் ஆணையரை சந்தித்து, தங்கள் அதிருப்தியையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.