பழைய காதலை புதுப்பிக்க மனைவியைக் கொன்ற கணவன்!

இந்தியா கிரைம் நியூஸ்
prem - 2026

கேரளா கோட்டையம் பகுதியை சேர்ந்த தம்பதி பிரேம்குமார் – வித்யா.
கடந்த 22ம் தேதி வித்யாவை காணவில்லை என்று பிரேம்குமார் உதயம்பூர் காவல்நிலையத்தில் புகார் தந்தார். அதனால் காவல்நிலையத்தில் விசாரணையை ஆரம்பித்தனர்.

அப்போது வித்யாவின் செல்போன் சிக்னல் பீகார் இடத்தை காட்டியது.. அதனால் இது சம்பந்தமான விசாரணையில் காவல்துறையினர் இறங்கினர். இதனிடையே
நெல்லையில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு காட்டில் சடலத்தை வீசப்பட்டுள்ளதாக ஒரு தகவல் கிடைத்தது. அது யார் என்ன என்று விசாரித்தால் காணாமல் போன வித்யா என்பது தெரியவந்தது.

தங்கள் மனைவியை யாரோ கொன்றுவிட்டார்கள் என்ற அதிர்ச்சி தகவலை பிரேம்குமாருக்கு சொல்ல காவல்துறையினர் முயன்றனர்.

ஆனால், பிரேம்குமார் வேறு ஒரு பெண்ணுடன் நெல்லையிலேயே குடும்பம் நடத்தி கொண்டிருப்பதை பார்த்ததும் அதிர்ந்தனர்.. அதனால் பிரேம்குமார் மீது சந்தேகம் எழுந்தது.. அவரது செல்போன்கள் மறைமுகமாக ஆய்வு செய்யப்பட்டன.

அப்போதுதான் சுனிதா என்ற பெண்ணின் பெயர் அடிபட்டது. பிரேம்குமார் – சுனிதாவும் வாட்ஸ்அப்பில் பேசியதை காவல்துறையினர் ரெக்கார்ட் செய்தனர். “சுனிதா.. நான்தான் கொலைகாரன்னு போலீஸ்காரங்க மோப்பம் புடிச்சிட்டாங்க.. அதனால வித்யாவை கொலை செய்ததை நானே காவல்நிலையத்தில் சொல்ல போகிறேன்” என்றார்.

vidhya - 2026

இந்த ரெக்கார்ட்டை அடிப்படையாக வைத்து காவல்துறையினர் பிரேம்குமாரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது பிரேம் அளித்த வாக்குமூலம் இதுதான்: “நானும் சுனிதாவும் ஸ்கூலில் ஒன்றாக படித்தவர்கள்…

96 பட பாணியில் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில்தான் திரும்பவும் சுனிதாவை பார்த்தேன்… ஸ்லிம்மாக, அழகாக இருந்தாள்.. எங்களுக்குள் பழைய காதல் பற்றிக் கொண்டது.

அவளுக்கும் அவளது கணவரை பிடிக்கவில்லை.. எனக்கும் என் மனைவி வித்யாவை பிடிக்கவில்லை.. அதனால் நானும் சுனிதாவும் இனி வரும் காலங்களில் சந்தோஷமாக வாழ முடிவு செய்தோம்.. ஆனால் வித்யா தடையாக இருக்கவும் கொலை செய்ய முடிவு செய்தேன்..
த்ரிஸியம் பட பாணியில் (தமிழில் பாபநாசம் படம்) கொலை பண்ண இருவரும் முடிவு செய்தோம்.

வித்யா குண்டாக இருப்பாள்.. அதனால், உடம்பு குறைக்க ஒரு ஆயுர்வேத சிகிச்சை தருகிறோம் என்று என்று சொல்லி திருவனந்தபுரத்தில் ஒரு வில்லா-விற்கு அழைத்து சென்றோம்.. நள்ளிரவில் வித்யாவுக்கு மருந்து என்று மதுவை வலுக்கட்டாயமாக குடிக்க வைத்தோம்..

மயங்கி விழுந்ததும், நானும், சுனிதாவும் வித்யாவை கழுத்தை நெறித்தோம்.. உடலை காரில் ஏற்றிக்கொண்டு, நெல்லை போனோம்.

அங்கே ரோட்டோரம் கிடந்த ஒரு புதர்காட்டில் சடலத்தை வீசிவிட்டோம்.. காவல்துறையினரை குழப்ப, வித்யாவின் செல்போனை பீகார் செல்லும் ரயிலில் போட்டுவிட்டோம்.

இப்போது 2 மாசமாக நானும் சுனிதாவும் ஒன்றாக குடும்பம் நடத்தி வருறோம்” என்றார். இதையடுத்து, சுனிதாவும், பிரேம்குமாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.