நிலங்களை விவசாயிகளுக்கு திருப்பிக் கொடுத்து விடுவோம்: ஆந்திரா அமைச்சர்!

இந்தியா லைஃப் ஸ்டைல்
hyderabad - 2026

நிலங்களை விவசாயிகளுக்கு திருப்பிக் கொடுத்து விடுவோம்…என்று ஆந்திரா அமைச்சர் பரபரப்பு பேச்சு. ஆந்திரா தலைநகர் அமராவதி பற்றி பரபரப்பு கருத்து தெரிவித்த அமைச்சர் ‘பெத்திரெட்டி’ ராமச்சந்திரா ரெட்டி.

அமராவதியில் விவசாயிகளிடம் இருந்து பெற்ற 33 ஆயிரம் ஏக்கர் நிலங்களை திரும்ப அளித்து விடுவோம் என்றார் அமைச்சர். தேர்தலுக்கு முன்பே ஜெகன் வாக்களித்தார் என்று கூறினார் பெத்திரெட்டி.

தலைநகரின் நிலங்களை திருப்பிக் கொடுக்கப் போவதாக தேர்தலுக்கு முன்பே ஜெகன் அறிவித்தார் என்று நினைவு படுத்தினார். அமராவதியில் நிர்மாணம் செய்ய போகும் கட்டடங்கள் தற்காலிகமானவையே என்று சந்திரபாபுவே கூறினார் என்றார். தாமும் கூட அமராவதியை தற்காலிக தலைநகராகவே கருதுவதாகத் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தலைநகர் குறித்து கூறிய செய்திகள் பரபரப்பாக மாறின. 3 தலைநகர் இல்லாவிட்டால் 30 தலைநகர் வைத்துக் கொள்வோம் என்றார் அமைச்சர் .

“தலைநகரோடு மத்திய அரசுக்கு சம்பந்தமில்லை… அவர்களின் நிதி தேவை இல்லை. தலைநகருக்கு மத்திய அரசின் அனுமதியும் தேவையில்லை . அது மாநில எல்லைக்குள் உள்ள விஷயம் . லெஜிஸ்லேடிவ் கேபிடலுக்கு 300 ஏக்கர் போதும். ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் அவசியமில்லை. ஹைதராபாதில் செக்ரிடரியட், அசெம்பளி கட்டடங்கள் எத்தனை ஏக்கரில் உள்ளன?” என்று கேள்வி எழுப்பினார்.

தலைநகரை மாற்றக் கூடாது என்று அமராவதியில் தாரணா செய்பவர்கள் எல்லாம் தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்களே என்று குற்றம் சாட்டினார். நிலங்களைப் பிடுங்கிக் கொண்டவர்களே போராட்டம் நடத்துகிறார்கள் என்றார்.

அமராவதியில் இன்சைடர் டிரேடிங் மீது விசாரணை தொடரும் என்றார் ராமச்சந்திர ரெட்டி.

சந்திரபாபு எந்த உத்தேசத்தில் தலைநகரை அமராவதியில் ஏற்பாடு செய்தார் கூறவேண்டும்… துள்ளூரு தெலுகுதேசம் கட்சித் தலைவர்கள் குறைந்த விலைக்கு நிலங்களை விழுங்கி விட்டார்கள் என்று அமைச்சர் குற்றம் சாட்டினார்.

விசாகப்பட்டினத்தில் ஒய்சிபி தலைவர்கள் நிலங்களை வாங்கியதாக கூறுவது உண்மை இல்லை. இப்போதே அங்கு நிலங்களின் விலை அதிகமாக உள்ளது என்றார் அமைச்சர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.