1971க்கு முன் பிறந்தவர் குடியுரிமையை நிரூபிக்க தேவையில்லை!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
PARLIAMENT - 2026

இந்திய குடியுரிமையை நிரூபிக்க 1971-ம் ஆண்டுக்கு முந்தைய ஆவணங்கள் தேவை இல்லை என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்தின் ட்விட்டர் பதிவு: பிறந்த தேதி, பிறந்த இடம் இவை தொடர்பான எந்தவொரு ஆவணத்தையும் கொடுத்து இந்தியாவின் குடியுரிமை நிரூபிக்கப்படலாம். எந்த ஒரு இந்திய குடிமகனும் அர்த்தமற்ற வகையில் துன்புறுத்தப்பட மாட்டார்கள்.

1971-க்கு முந்தைய முன்னோர்களின் அடையாள அட்டைகள், பிறப்புச் சான்றிதழ்கள் ஆகியவற்றின் மூலம்தான் இந்திய குடிமக்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.

கல்வி கற்காதவர்கள், ஆவணங்களே இல்லாதவர்களுக்கு உள்ளூர் பிரதிநிதிகளின் சான்றுகளை அதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.