ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல்!

Published:

kashmir 2 - 2026

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டியுள்ள இந்திய நிலைகளைக் குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

இன்று பூஞ்ச் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டியுள்ள இந்திய நிலைகளைக் குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. பூஞ்ச் மாவட்டத்தின் மெந்தார் மற்றும் கிருஷ்ணா காதி செக்டார் பகுதிகளில் தாக்குதல் நடைபெற்று வருகிறது

சிறிய ஆயுதங்கள் மற்றும் மோட்டார் குண்டுகளை வீசி பாகிஸ்தான் துருப்புக்கள் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன. அதே நேரத்தில் இந்தத் தாக்குதலுக்கு இந்திய தரப்பில் இருந்தும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடா்ந்து, இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

Related articles

Recent articles

spot_img