சீரியலுக்கு திருடப்பட்ட படத்தின் பின்னணி இசை! படக்குழுவினர் அதிர்ச்சி!

Published:

nasp - 2026

தங்கள் படத்தின் பின்னணி இசையை திருடி, டிவி.சீரியலில் பயன்படுத்தியதாக, படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சினிமா பிளாட்பார்ம் என்ற நிறுவனம் சார்பில் வி.டி.ரித்திஷ்குமார் தயாரித்துள்ள படம், நான் அவளை சந்தித்த போது. இதில் சந்தோஷ் பிரதாப் ஹீரோவாக நடிக்கிறார். இவர் பார்த்திபன் இயக்கிய கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் நடித்தவர்.

நாயகியாக சாந்தினி நடிக்கிறார். மலையாள நடிகர் இன்னசன்ட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் ஜி.எம்.குமார், சுஜாதா, கோவிந்தமூர்த்தி, சாம்ஸ், டி.பி.கஜேந்திரன், சாந்தி வில்லியம்ஸ் உட்பட பலர் நடித்துள்ளனர்.

nan avalai santhitha pothu 1 - 2026

எல்.ஜி.ரவிசந்தர், இந்தப் படத்தை இயக்குகிறார். இவர், மாசாணி, ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி படங்களை இயக்கியவர். ஆர்.எஸ்.செல்வா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹித்தேஷ் முருகவேல் இசை அமைத்துள்ளார். இந்தப்படம் வரும் 27 ஆம் தேதி வெளியாகிறது.

இதற்கிடையே இந்த படத்தின் பின்னணி இசையை திருடி, பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் இருந்து வெளிவரும் டி.வி.சீரியலில் பயன்படுத்திவிட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

இதுபற்றி படக்குழுவிடம் விசாரித்தபோது, இந்தப் படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு பணிகள், கோடம்பாக்கத்தில் உள்ள ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் நடந்தது. அங்கு சில சீரியல்களுக்கான வேலைகளும் நடந்து வருகின்றன.

அங்கு எங்களின் பின்னணி இசையை அப்படியே திருடி, பிரபல சேனலில் வெளியாகும் கிராமத்துக் கதையை கொண்ட சீரியலுக்குப் பயன்படுத்திவிட்டனர்.

இதுபற்றி கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளோம். என தெரிவித்தனர்.

Related articles

Recent articles

spot_img