
உலகில் இரண்டாவதாக பெரிய அளவில் கரும்பு உற்பத்தி செய்வது இந்தியாதான்.
கோடைகால வெயிலை சமாளிக்க என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் அவதிபடுகின்றனர். அப்படி கோடைகால வெயிலில் தவிக்கும் மக்களுக்கு பல குளிர்ச்சியான, உடலுக்கு இயற்கையான பொருட்கள் காணகிடைகின்றன. அவற்றில் பலரும் ஒன்று கரும்புச்சாறு.
கரும்பு என்றாலே பலருக்கு நினைவிற்கு வருவது இனிப்பு சுவை தான். வாயில் நீர் ஊற வைக்கும். கரும்புச்சாறு என்பது கோடைக்காலத்தில் இயற்கை நமக்கு அளித்த அற்புதமான பானம் ஆகும். நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் வெள்ளைச் சர்க்கரையின் மூலப்பொருள் கரும்புதான் என்பது எல்லோருக்கும் தெரியும். வெள்ளைச் சர்க்கரை உடலுக்கு அதிக தீமைகளைத் தருகிறது. ஆனால் கரும்பு உடல்நலத்தினைப் பாதுகாக்கிறது. என்ன? கரும்பில் இருந்து பெறப்படும் வெள்ளை சர்க்கரை தீமை? ஆனால் கரும்பு நன்மையா? எனக் கேள்வி கேட்கலாம்……
கரும்பிலிருந்து வெள்ளைச்சர்க்கரை தயார் செய்யப்படும்போது கரும்புச்சாறானது பலவேதிப்பொருள்களுடன் வினைபுரிகிறது. இதனாலே உடல்நலத்திற்குத் தேவையான கரும்பிலிருக்கும் ஊட்டச்சத்துகள் உருமாற்றம் அடைந்து உடலுக்கு தீமை செய்கின்றன. இந்த கரும்புச்சாறு குடிப்பதற்கு இனிமையாகவும், உடல் ஆரோக்கியதிற்கும் பெரும் உதவியாக உள்ளது.
கரும்புச்சாறு தயாரிப்பதற்க்கு என்று பிரத்யேக மெஷின் ஒன்று உள்ளது. கடைக்காரர் நீளமான கரும்புகளை ஒரு பக்கம் ஒன்றிரண்டாகவெட்டி மற்றொரு பக்கம் எடுத்தால், கரும்பு நசுங்கி சக்கையாகி, அதிலிருந்து ஜூஸைப் பிரித்துக் கொடுத்துவிடும். செயற்கைக் குளிர்பானங்களில் என்னென்ன இருக்கின்றன என்பது தெரியாமலேயே வாங்கி அருந்துவதைவிட, இவ்வாறு இயற்கை முறையில் நம் கண்ணெதிரே பிழிந்து கொடுக்கப்படும் கரும்பு ஜூஸை அருந்துவது நல்லது. கரும்பின் இனிப்புச் சுவைக்கு நிகர் அது மட்டும்தான்.
கரும்பு எல்லாக் காலத்துக்கும் ஏற்ற ஆரோக்கிய பானம். அதிலும், கோடையில் இதன் பலன்கள் ஏராளம்.
ஒரு டம்ளர் கரும்புச் சாறு எடுத்துக் கொள்ளவும். அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் இஞ்சி சாறு சேர்த்து கலக்கவும். உணவுக்கு பின்னர் இதை எடுத்துக் கொண்டால் ரத்தம் சுத்தமாகும். செரிமானத்தை தூண்டும்.
உடலை இளைக்க செய்வதில் கரும்பு முக்கியப்பங்கு வகிக்கிறது.
கரும்பு சாறில் உள்ள இரசாயனங்கள் உடலில் சேர்ந்த தேவையற்ற கொழுப்பை கரையச் செய்கிறது. உடல் எடை குறைவதால் ஏற்படும் சோர்வையும் கரும்பு சாறு தடுக்கிறது. பயன்படுத்திய 12 வாரங்களில் இதன் பலன் வெளிப்படையாக தெரியும்.
உடல் எடையை குறைக்க உதவும் கரும்பு எந்தவிதமான பாதக பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.
இது தொற்றுநோய்களை குணப்படுத்த உதவுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
இரும்பு, மக்னீசியம், கால்சியம் மற்றும் பிற சத்துக்கள் நிறைந்திருக்கும், எனவே இது நீரிழப்புக்கு நல்லது. இது பொதுவான சளி மற்றும் பல தொற்று நோய்களை குணப்படுத்த உதவுகிறது. மற்றும் இது உடலின் புரத அளவுகளை அதிகரிக்கும்போது காய்ச்சலைக் கையாளுகிறது. இவை தவிர கரும்பு சாற்றில் ஒரு சில சிறந்த ஆரோக்கியமான பயன்கள் உள்ளன.
உடலில் சிறுநீரகக்குழாய், பிறப்பு உறுப்பு செரிமான மண்டலக்குழாய் போன்ற பல இடங்களில் தொற்று நோய்களால் எரிச்சல், அரிப்பு போன்றவை உண்டாகும். இதனை சரிசெய்ய ஒரு தம்ளர் கரும்பு சாறு போதும். சிறுநீரகக் குழாய் தொற்றுக்கள், சிறுநீரகக் கற்கள் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டை உறுதி செய்வதற்கு உதவுகிறது.
ஒரு நாளைக்கு இரண்டு முறை எலுமிச்சை மற்றும் தேங்காய்த் தண்ணீரில் கலந்த கரும்பு சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.
வாய் துர்நாற்றம் இருப்பது சமூகத்தில் நம்மை தாழ்த்தி விடுகிறது. உங்களுக்கு வாய் துர்நாற்றம் அதிகம் இருக்கும் பச்சத்தில், நீங்கள் கரும்பு சாற்றை ஒரு தீர்வு தரும் பானமாக கருதி கொள்ள வேண்டும்.
சிறுநீரக கற்களை கரைப்பது கரும்பின் பணி. பொதுவாக உடலில் ஏற்படும் வறட்சியால் இந்த கற்கள் உருவாகும். அதை தடுப்பதற்காகத்தான் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். ஏனெனில் கற்கள் ஏற்படாமல் கழிவுகளை வெளியேற்றி விடும். போதிய தண்ணீர் மட்டுமின்றி கரும்பு சாறும் குடித்தால் இரட்டை பலன் கிடைக்கும்.
கரும்பு, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமங்களை கொண்டிருக்கிறது, இது உங்கள் பற்களின் பற்சிப்பியை உருவாக்க உதவுகிறது. மேலும் இது பற்சிதைவை தடுத்து உங்கள் பற்கள் வலுவடைய உதவுகிறது.
கரும்பில் உயிர்ச்சத்து (வைட்டமின்) மற்றும் கனிமச்சத்துக்களுடன் பாஸ்பரஸ், இரும்பு சத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்றவையும் அதிகம் உள்ளது. இதனை உண்பதால் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம். இருமல், சளி, தொண்டை வலி இருப்பவர்கள் கரும்பு சாப்பிட மாட்டார்கள். அது தவறானது. இந்த பிரச்சனைகளுக்கு கரும்பே சிறந்தது.
கரும்பு இனிப்பாக இருப்பதால் நீரழிவு நோயாளிகள் சாப்பிட பயப்படுவார்கள். ஆனால் உண்மையில் இதில் இனிப்பானது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை சீராக வைக்கும். உடல் எடையை குறைக்க விரும்புவோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அச்சமின்றி அளவோடு சாப்பிடலாம்.
கரும்பு சாறு என்பது உடனடி ஆற்றலிற்க்கு ஒரு சிறந்த ஆதாரமாகும். நீங்கள் மிகவும் தாகமாக இருந்தால் கரும்பு சாறு அருந்தும் போது அது உங்களுக்கு புத்துயிர் அளித்து உங்கள் மன நிலையை புதுப்பிக்கிறது.
உங்கள் தொண்டைக்குள் திடீர் அரிப்பு அல்லது எரிச்சலை நீங்கள் உணர்ந்தால், கரும்பு சாற்றை ஒரு குவளையும் சுண்ணாம்பு மற்றும் கருப்பு உப்பு ஒரு குவளையுடன் குடிக்க வேண்டும். வைட்டமின் சி மிகுதியாக கரும்பு சாறுகளில் காணப்படுகிறது, இது தொண்டை புண் குணமாக உதவுகிறது. கரும்பு சாறு என்பது வைரஸ்கள் அல்லது பாக்டீரியா நோய்த்தொற்றுகளை தடுக்கக்கூடிய எதிர்ப்பொருட்களின் ஒரு வளமான மூலமாகும்.
தினமும் இரண்டு முறை மலம் கழிக்க வேண்டியது அவசியம். அப்படி இல்லாதவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். இந்த கரும்பு சாறு அருந்துவதன் மூலம், இதயம் மற்றும் நுரையீரலுக்கு பலம் அளிக்கிறது. வயிற்று புண்களை சரி செய்யும். மலச்சிக்கலை சரிசெய்கிறது.
கரும்பு வேரை நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிடுவதன் மூலம் சிறுநீரகத்தில் ஏற்படும் எரிச்சலை சரி செய்யலாம்.
உடல் எரிச்சல் என்பது மிகவும் கொடுமையான ஒன்றாகும். இதற்கு கரும்பு சாறுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏற்படும் எரிச்சலை சரிசெய்யலாம். உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது.
நமது உடலில் அனைத்து இயக்கங்களையும் மூளை தாய் நிர்வகிக்கிறது. இந்த கரும்புச் சாறை அருந்துவதன் மூலமாக மூளையின் செயல்பாட்டை அதிகரித்து சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள இது உதவுகிறது.
குழந்தைகளுக்கு அடிக்கடி விளையாடும் போது கீழே விழுவதன் காரணமாக புண்கள் உண்டாகும். இதற்கு கரும்பை நசுக்கி புண் இருக்கும் இடங்களில் கட்டி வைப்பதன் மூலம் விரைவில் குணமாக்கலாம்.
முகப்பருக்கள் ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் மிகப்பெரிய தொல்லையாக உள்ளது. இது அழகையே கெடுப்பதாகவும் உள்ளது. நாட்டு சர்க்கரை, தேன் மெழுகு சேர்த்து காய்ச்சி முகப்பருவின் மீது தடவுவதன் மூலம் பருக்களை விரைவில் மறைக்கலாம்.பொடுகுத் தொல்லை இருப்பவர்கள் கரும்பு சாற்றை பயன்படுத்தி வந்தால் அது நீங்கும்
தங்களுக்கு வயதான முக தோற்றம் ஏற்படுவதை விரும்புபவர்கள் யாருமே இல்லை. வயது ஏற, ஏற உடலில் இருக்கும் செல்களின் வளர்ச்சி குறைந்து, முதுமைத் தோற்றம் ஏற்படவே செய்வதை தடுக்க முடியாது. எப்போதும் இளமை தோற்றத்துடன் இருக்க விரும்புபவர்கள் கரும்பு ஜூஸ் பருகுவது சிறந்த பலன்களைத் தருகிறது. இதிலிருக்கும் ஆன்ட்டி – ஆக்ஸிடென்ட்ஸ், பிளேவனாயிட்ஸ், பினோலிக் கூட்டுப்பொருட்கள் சருமத்தில் ஈரப்பதத்தை தன்மையை கூட்டுகிறது. தோலில் ஒரு பளபளப்பு தன்மையை கொடுத்து உடலுக்கு இளமைத் தோற்றத்தைத் தருகிறது
கருவுற்றிருக்கும் பெண்கள் அடிக்கடி அருந்த வேண்டிய சிறந்த பானமாக கரும்பு ஜூஸ் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இதில் போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி 9 சத்துகள் அதிகம் இருப்பதால், இவை குழந்தை குறைபாடுகளோடு பிறக்கும் நிலையை தடுக்கிறது. மேலும் பெண்கள் கரும்பு ஜூஸை அடிக்கடி பருகி வந்தால், அவர்களின் கருப்பையில் கரு முட்டைகளை உற்பத்தி அதிகரித்து விரைவில் அப்பெண்கள் கருவுற உதவுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பெப்ரில் குறைபாடுகள் என்பது வளரும் குழந்தைகளுக்கு அதிகம் ஏற்படும் ஒரு குறைபாடாக இருக்கிறது. இக் குறைபாடு ஏற்பட்ட குழந்தைகள் அடிக்கடி அதிக உடல் உஷ்ணத்தை உண்டாக்கும் ஜூர நோய்களால் பாதிக்கப் படுவதும், அதனால் அவர்களின் உடலில் புரதச்சத்து இழப்பு அதிகரித்து, உடலை மிகவும் வலுவிழக்கச் செய்யக்கூடியதாகும். இத்தகைய குறைபாட்டிற்கு சிறந்த இயற்கை மருந்தாக கரும்பு ஜூஸ் இருக்கிறது. கரும்பு ஜூஸ் சிறு குழந்தைகள் அடிக்கடி பருகுவதற்கு கொடுத்து வந்தால், மேற்கூறிய இந்த பெப்ரில் குறைபாடு ஏற்படாமல் தடுக்கலாம்.
மஞ்சள் காமாலை பாதிக்கப்படுபவர்களை தினமும் கரும்பு சாறு குடிக்கும் மாறு ஆயுர்வேத மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
இது உடலில் உள்ள பித்த அளவை சீர் செய்கிறது. மஞ்சள் காமாலை நோயினால் உடலில் குறைகின்ற சத்துகளை மேம்படுத்தும்.
கரும்பில் இயற்கையாக உள்ள அல்கலைன் என்னும் பொருள், புற்றுநோயை குணப்படுத்தும் தன்மையுடையது. குறிப்பாக பெருங்குடல், நுரையீரல் அல்லது மார்பக புற்றுநோய் போன்றவற்றிற்கு சிறந்தது.
தினமும் தொடர்ந்து கரும்பு சாறை குடித்தால் கொடிய நோயான புற்று நோய் நம் உடலில் வர எந்த வித சாத்தியமும் இல்லை என்று ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் கூறுகின்றனர்.
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினைகளுக்கு தீர்வளிக்க கரும்பு சாறு உதவுகிறது. மாதவிடாய் அறிகுறிகளை குறைக்க உதவுகின்றன. எனவே உங்க மாதவிடாய் காலம் ஒரு வாரத்திற்கு முன்பே கரும்பு சாற்றை தவறாமல் குடியுங்கள்.