இயற்கை வளம் மிகுந்த ஆண்டாக அமைய வேண்டும்! தமிழிசை தமிழில் புத்தாண்டு வாழ்த்து!

இந்தியா சற்றுமுன்
tamilisy - 2026

நாளை புத்தாண்டு பிறக்கப்போவதால், அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழிசை சவுந்தராஜனும் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், “அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். #happynewyear2020” என்று வாழ்த்து சொல்லி உள்ளார்.

இது தொடர்பாக வாழ்த்து செய்தி ஒன்றையும் தனியாக வெளியிட்டுள்ளார். அதில், “2020-ஆம் ஆண்டு அனைத்து மக்களுக்கும் இன்பத்தையும், மகிழ்ச்சியையும், சுகத்தையும் தரும் ஆண்டாக அமைய வேண்டும்.

இயற்கை பேரிடர்கள் இல்லாத ஆண்டாக, இயற்கை வளம் மிகும் ஆண்டாக அனைவருக்கும் அமைதி தரும் ஆண்டாகவும் இந்த ஆண்டு அமைய வேண்டும். வேற்றுமை களைந்து ஒற்றுமையோடு அனைவரும் மகிழ்ச்சியோடு புத்தாண்டை கொண்டாடுவோம்.

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். அனைவருக்கும் எனது ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.