பிரியங்கா தன் ஒரிஜினல் குடும்ப பெயரை வைத்துக் கொள்ள வேண்டும்! நிரஞ்சன் ஜோதி!

priyanka 1 1 - 2026

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வெடித்தது. உத்தரப் பிரதேசத்தில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 19 பேர் உயிரிழந்தனர். ஏராளமான பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டது.

இந்நிலையில் போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டு பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தவர்களே அதற்கான தொகை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் சொத்து பறிமுதல் செய்யப்படும். அவர்களுக்கு எதிராகப் பதிலுக்குப் பதில் நடவடிக்கை எடுப்போம் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்திருந்தார்.

இதற்கிடையே லக்னோவில் 4 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று புறப்படும் முன் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

sathvi - 2026

அப்போது அவர் கூறுகையில், “காவி நிறம் என்பது இந்து மதத்தையும், ஆன்மிகத்தையும் குறிக்கிறது. ஆனால், காவி உடை அணிந்து கொண்டு முதல்வர் ஆதித்யநாத் வன்முறைக்கும், பழிவாங்கலுக்கும் துணை போகக்கூடாது. தேசத்தின் ஆன்மாவில் பழிவாங்கலுக்கும், வன்முறைக்கும் இடமில்லை. இந்து மதத்தின் நிறம் காவி வண்ணம். முதல்வர் யோகி இந்து மதத்தைப் பின்பற்ற வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலடி அளித்த முதல்வர் ஆதித்யநாத் தனது ட்விட்டர் பக்கத்தில், “சன்நியாசிகளின் வாழ்வில், பொதுப்பணியில் யாரேனும் தலையிட்டால் தண்டிக்கப்படுவார்கள். வாரிசு அரசியலிலும், அனுதாப அரசியலிலும் இருப்பவர்களுக்குச் சேவையைப் புரிந்து கொள்ளுதல் கடினமாகத்தான் இருக்கும்’ எனத் தெரிவித்தார்.

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

இந்நிலையில் மத்திய ஊரக மேம்பாட்டுத்துறையின் இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தில்லியில் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தபோது, பிரியங்கா காந்தியைக் கடுமையாகச் சாடினார்.

அப்போது அவர் கூறியதாவது:

காந்தி என்ற பெயரைப் போலியாக வைத்திருப்பவர்களால் உண்மையில் காவி நிறத்தின் உண்மைத் தன்மையைப் புரிந்து கொள்ள முடியாது. பிரியங்கா காந்தி தனது பெயரில் உள்ள காந்தி என்ற பெயரை நீக்கிவிட்டு, பெரோஸ் பிரியங்கா என்று மாற்றிக் கொள்ள வேண்டும்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கிரிமினல்களுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பதைக் கண்டு பிரியங்கா காந்தியால் பொறுக்க முடியவில்லை. போராட்டக்காரர்களுக்குப் பின்னால் இருக்கிறாரா அல்லது இல்லையா என்பது குறித்து பிரியங்கா காந்தி வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.

காவி நிறத்தைப் பற்றி பிரியங்கா காந்தி எளிதாகப் பேசக் கூடாது. அதுபற்றி அதிகமாக அவர் படிக்க வேண்டும். போலியாகப் பெயர் வைத்திருப்பவர்கள்தான், அனைவரின் பெயரையும் அவ்வாறு பார்க்கத் தோன்றும். அதுபோலத்தான் யோகியின் பெயரையும் பிரியங்கா பார்த்துள்ளார்.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

அப்படியென்றால் அப்பாவிகள் மீது கல்லெறிந்தவர்கள், அப்பாவிகளைத் தாக்கியவர்களை போலீஸார் தண்டிக்க வேண்டுமா அல்லது இல்லையா என்பதைப் பிரியங்கா காந்தியே கூறட்டும். பிரியங்கா காந்திதான் போராட்டக்காரர்களைத் தூண்டிவிட்டு அவர்களை சாலைக்கு வரச் சொல்வதாக நான் பார்க்கிறேன்”.

இவ்வாறு சாத்வி நிரஞ்சன் ஜோதி குற்றம் சாட்டினார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories