பரிதாபம்! வகுப்பறையில் சிறுநீர் கழித்த மாணவி! தோழிகள் சிரித்தார்கள் என்பதற்காக இப்படியா செய்வது?!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
dyfi sfi girl - 2026

வகுப்பறையிலேயே இன்டர் படிக்கும் மாணவி சிறுநீர் கழித்தார். அதனால் உடன் படிக்கும் மாணவிகள் சிரித்தனர். அதனை பெரிய அவமானமாகக் கருதிய இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் நடந்தது.

சக மாணவிகள் சிரித்தார்கள் என்பதை அவமானமாக கருதிய இன்டர்மீடியட் மாணவி தூக்கில் தொங்கி உயிர் விட்டார்.

மேற்கு கோதாவரி மாவட்டம் ஜங்காரெட்டிகூடாவில் இந்த சம்பவம் நேர்ந்தது. போலீசாரும் குடும்பத்தினரும் தெரிவித்த விவரத்தின்படி… நீடமர்ரு மண்டலத்தை சேர்ந்த சுவாதி (18) ஜங்காரெட்டிகூடாவில் ஒரு பெண்கள் கல்லூரியில் இன்டர் இரண்டாம் வருடம் படிக்கிறார்.

கிறிஸ்மஸ் விடுமுறைக்காக வீட்டிற்கு சென்று பெண்கள் மீண்டும் கல்லூரிக்குத் திரும்பினர். வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு தனி வகுப்புகள் நடந்த போது சுவாதி சிறுநீர் கழிப்பதற்கு செல்ல வேண்டுமென்று ஆசிரியையை அனுமதி கேட்டார்.

ஆனால் அந்த ஆசிரியை அனுமதி மறுத்ததால் சிறுநீரை அடக்க முடியாமல் வகுப்பறையிலேயே பள்ளி உடையிலேயே சிறுநீர் கழித்து விட்டார்.

அதைப் பார்த்த சக மாணவிகள் பக்கென்று சிரித்து விட்டனர். அதனால் மன வருத்தத்துக்கு ஆளான சுவாதி வகுப்பறையை கழுவுகிறேன் என்று சொல்லிச் சென்றார். தன் அறைக்கு திரும்பி துப்பட்டாவால் மின்விசிறியில் கட்டி தூக்கில் தொங்கி விட்டார்.

மாலை ஆறு மணிக்கு இரவு உணவு சமயத்தில் வரவேண்டிய பெண் வராததால் சந்தேகம் வந்து அறைக்குச் சென்று பார்க்கையில் சுவாதி மின்விசிறியில் தொங்கிக் கொண்டிருந்தார்

அதனால் அதிர்ச்சிக்குள்ளான சக மாணவிகளும் ஆசிரியைகளும் போலீசாருக்கு தெரிவித்தனர். உடனே ஜங்காரெட்டிகூடம் சிஐ நாகேஸ்வர நாயக், எஸ்ஐ அல்லு துர்காராவு சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

ஆனால் இந்த செய்தியை தங்களிடம் கூறாமல் கல்லூரி ஊழியர்கள் மறைத்து விட்டார்கள் என்று குடும்பத்தினர் மருத்துவமனை அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதலில் கல்லூரியிலிருந்து தம் பெண் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் ஆஸ்பத்திரியில் சேர்த்து இருப்பதாகவும் செய்தி தெரிவித்தார்கள் என்று தந்தை கூறினார்.

கல்லூரி ஊழியர்கள் தன் பெண்ணை வேதனைப் படுத்தி கொன்று விட்டார்கள் என்று போலீசாரிடம் குற்றம்சாட்டினர். அதனால் மருத்துவமனை எதிரில் பரபரப்பு ஏற்பட்டது . இதை அடுத்து, சம்பவம் பற்றி புகார் அளித்தால் வழக்கு பதிவு செய்வோம் என்று எஸ்ஐ கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.