கொரோனா: வலிமை, இந்தியன் 2 படத்தில் நடிக்கும் குழந்தை நட்சத்திரத்தின் தாய் உயிரிழப்பு!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா தமிழகம்
indian
indian

கொரோனா இரண்டாம் அலையில் பல உயிர்கள் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் குழந்தை நட்சத்திரமான ஆலமின் 34 வயது தாய் யாஷிம் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளார்.

ராயபுரத்தை சேர்ந்த சேல்ஸ்மேனான முபாரக்கிற்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர்களில் ஒருவன் தான் 10 வயதாகும் ஆலம். இவன், அஜித் நடிக்கும் வலிமை படத்திலும், ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்திலும் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறான். குறிப்பாக இந்தியன் 2 படத்தில் கமலின் பேரனாக நடித்து வருகிறான்.

இந்நிலையில் ஆலமின் தாய் யாஷிம் மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருந்துள்ளார். சமீபத்தில் இவர்களின் குடும்பத்தில் உள்ள அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனை படுக்கை வசதி கிடைக்காததால், இவர்கள் அனைவரும் வீட்டில் தனிமையில் இருந்துள்ளனர்.

valimai
valimai

கொரோனா முதல் அலையிலும் இவர்கள் குடும்பத்தினர்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, பிறகு நீண்ட போராட்டத்திற்கு பிறகு அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.

ALSO READ:  மதுரை கோயில் கும்பாபிஷேகம்; நெல்லையில் இருந்து தென்காசி வழி சிறப்பு ரயில்!

ஆனால் இந்த முறை கர்ப்பமாக இருந்ததால் யாஷ்மினின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக ஆலமின் தந்தைக்கு ஏற்பட்ட விபத்தால் அவரால் வேலைக்கு செல்ல முடியாமல், வீட்டு செலவுகளை சமாளிக்க முடியாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் ஆலம் நடிகராகி விட்டதால் இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவி, பலரும் நிதி அளித்துள்ளனர். கிட்டதட்ட ரூ.9 லட்சம் நிதி கிடைத்ததை வைத்து தனது தாய்க்கு ஆலம், மருத்துவ செலவுகளை கவனித்துள்ளார்.

ஆனால் துரதிஷ்டவசமாக ஆலமின் தாய் யாஷினின் நுரையீரல் 80 சதவீதத்திற்கும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அவருக்கு பிரசவ வலியும் எடுத்துள்ளது.

டாக்டர்கள் கடுமையாக போராடியதை அடுத்து யாஷினுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தை பிறந்த பிறகு யாஷினிற்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

இந்த சமயத்தில் ஆலமும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததால், தனது தாய் இறந்தது அவனுக்கு தெரியாது.

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி... அழைக்கிறார் மோதிஜி!

முபாரக், தனது நண்பர்கள் சிலரின் உதவியுடன் யாஷினின் இறுதி சடங்குகளை செய்துள்ளார். மேலும் ஆலமின் சம்பள பாக்கியான மூன்றரை லட்சத்தை தந்து உதவும்படி வலிமை மற்றும் இந்தியன் 2 பட தயாரிப்பாளர்களிடமும் முபாரக் உதவி கேட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.