கொழுந்தியாவுடன் ஏற்பட்ட கள்ள உறவு! கர்ப்பிணி மனைவியை ஆள் வைத்துக் கொன்ற கணவன்!

இந்தியா கிரைம் நியூஸ் பொது தகவல்கள்
illical - 2026

மனைவியின் தங்கையுடன் தவறான உறவு வைத்திருந்த கணவர், தனது 35 வயது மனைவியை ஆள் வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக காவல்துறையினர் தரப்பில் கூறப்படுவதாவது: உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த பூஜா(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பவருக்கும் அவரது அக்காவின் கணவருக்கும் திடீரென கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

இருவரும் தங்கள் உறவை பல நாள் வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் மனைவியை தீர்த்துக்கட்ட பூஜாவின் அக்காள் கணவர் விரும்பினார்.

விஷம் கொடுத்து கொலை செய்ய திட்டமிட்டு அந்த முயற்சி தோற்றுப்போனதால் திருட்டு கொலை என்ற முயற்சியில் இறங்கி இருக்கிறார்.

pregnent 2 - 2026

அவரது திட்டப்படி வீட்டை யாரோ கொள்ளையடித்து அதில் அவரது மனைவியை கொன்றுவிட்டார்கள் என்று நாடகம் போட திட்டமிட்டார்.

இதற்காக மூன்றுபேருக்கு பணம் கொடுத்து அழைத்து வந்துள்ளார். அவர்கள் 35வயதாகும் அவரது கர்ப்பிணி மனைவியை கொலை செய்தனர். இந்த உண்மையை காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கண்டுபிடித்தனர்.

குற்றவாளி தனது மைத்துனியுடன் சேர்ந்து வாழவே இப்படி தனது மனைவியை கொன்றதாக வாக்கு மூலம் கொடுத்தார். இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.