கரோனா வைரஸ்…. விமான நிலையத்தில் தனி ஸ்கேனர்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
IMG 20200124 WA0027 - 2026

கரோனா வைரஸ்…. சம்ஷாபாத் விமானநிலையத்தில் பிரத்தியேக ஸ்கேனர்.

கரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருவதால் இந்தியா எச்சரிக்கை அடைந்துள்ளது.

சைனாவில் இருந்து வரும் விமானப் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கிரீனிங் செய்வதற்கு இந்தியா 7 விமான நிலையங்களில் ஏற்பாடு செய்துள்ளது.

ஹைதராபாதில் சம்ஷாபாத் சர்வதேச விமான நிலையத்தில் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார்கள்.

ஹாங்காங்கில் இருந்து ஹைதராபாத்துக்கு வரும் விமானப் பயணிகளை பரிசோதிக்க பிரத்தியேகமான தெர்மல் ஸ்கேனர் களை அமைத்துள்ளார்கள்.

IMG 20200124 WA0026 - 2026

சீனா ஹாங்காங் தாய்லாந்து தென்கொரியா ஜப்பான் நாடுகளில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

சைனாவில் புதன்கிழமை வரை இந்த வைரஸ் தாக்கி 17 பேர் இறந்தனர். சைனாவில் மொத்தம் 444 பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளதாக கணக்கெடுத்துள்ளனர்.

ஹைதராபாத் விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகளின் மருத்துவ பரிசோதனைக்கு ஏற்பாடுகள் செய்து உள்ளார்கள். விமானத்திலிருந்து இறங்கிய உடனே பரிசோதனை நிலையத்திற்கு பயணிகளை அழைத்துச் சென்று ஜுரம் இருமல் ஜலதோஷம் இருக்கிறதா என்று பரிசோதிப்பார்கள். அவ்வாறு இருப்பவர்களை ஐதராபாத் ஃபீவர் ஹாஸ்பிடலுக்கு அனுப்பி அங்கு ரத்த பரிசோதனை மற்றும் பிற மருத்துவப் பரிசோதனைகள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு மருத்துவ வசதி அளிக்கப்படும்.

ALSO READ:  மோடியிசம் : இப்போதைய காலகட்டம்

இதுவரை சைனாவில் இருந்து வந்த 63 விமானங்களின் பயணிகள் 13,000 பேரை பரிசோதனை செய்ததில் அவர்களில் யாரையும் கரோனா வைரஸ் தாக்கவில்லை என்று மத்திய மருத்துவ ஆரோக்கிய துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.