ஐஐடி மாணவர்கள் அதிரடி! நீளமான தேசிய கொடி கொண்டு பேரணி!

இந்தியா பொது தகவல்கள்
pune - 2026

குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.. 71-வது குடியரசு தின விழா என்பதால் இதற்கான கொண்டாட்டங்கள் நேற்று முதல் பல பகுதிகளில் நடந்து வருகின்றன.

இதில் நாடே வியந்து பார்த்தது புனேவில் இந்திய இன்ஸ்டிடியூட்ட மாணவர்களின் ஒற்றுமையைதான். மொத்தம் 4 ஆயிரம் மாணவர்கள் ஒன்றுகூடி தேசிய கொடியுடன் பேரணி நடத்தினர்.

அந்த மெகா மூவர்ண கொடியால் புனேவே அழகு பூண்டது.. பிரதான சாலையில் மாணவர்கள் சத்ரவதி சிவாஜி மகாராஜ், ராஜ்மதா ஜிஜாவ், தனாஜி மாலுசரே ஆகியோரின் உருவப்படங்களை தத்ரூபமாக உருவாக்கினர். இதில், தேசிய கொடியை மாணவர்கள் சாலையில் எடுத்து செல்லும் போட்டோக்களை ஏஎன்ஐ வெளியிட்டிருந்தது.

இதை பார்க்கும்போது, தார் ரோடு முழுவதும் தேடிய கொடி போர்த்தப்பட்டதை போல சிலிர்ப்பாக தென்பட்டது. ஐஐடி மாணவர்களின் மிகச்சிறந்த தேசபக்தியை இது வெளிக்காட்டியதுடன் அனைவரையும் புல்லரிக்க செய்துவிட்டது.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.