17ஆயிரம் அடி உயரம்; மைனஸ் 20 டிகிரி செல்சியஸ்… குடியரசு தினம் கொண்டாடிய வீரர்கள்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
ladakh republic celebrations2 - 2026

லடாக்கில் 17,000 அடி உயரத்தில்… மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் பனியிலும் குளிரிலும் இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் குடியரசு தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.

வெள்ளை நிற சீருடை அணிந்த வீரர்கள், “பாரத் மாதா கி ஜெய், வந்தே மாதரம்” என கோஷங்களை எழுப்பிய படியே, கைகளில் தேசியக் கொடியை பறக்கவிட்டபடியே அந்தக் கடுங் குளிரிலும், கொட்டும் பனிக்கட்டிகளுக்கிடையே அணிவகுத்து வந்தனர். சுமார் 2 நிமிடங்கள் கொண்ட இந்த வீடியோ தற்போது டிவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.

https://twitter.com/ShivendrAgni/status/1221314247239487488

#Himveers of #ITBP salute the Nation on #RepublicDay2020 #RepublicDayIndia என குறிப்பிட்டு இந்திதோ-திபெத்திய படையினருக்கான அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் போட்டோக்களும், வீடியோவும் பதிவிடப்பட்டுள்ளன.

ladakh republic celebrations1 - 2026

1962 ஆம் ஆண்டு அக்.24 ஆம் தேதி இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படை உருவாக்கப் பட்டது. தற்போது இந்தப் படை லடாக்கின் காரகோரம் முதல் அருணாச்சல பிரதேசத்தின் ஜசீப் லா பகுதி வரையிலான இந்திய-சீன எல்லையான 3488 கி.மீ., தொலைவைப் பாதுகாத்து வருகிறது.

ladakh republic celebrations - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.