டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி!

Published:

03 June28 Rupee rate against doller - 2026
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. சர்வதேச அந்நிய செலாவணிச் சந்தையில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது அண்மைக் காலத்தில் ஏற்பட்ட மிகப் பெரும் சரிவாக, கடந்த ஜூன் 19ஆம் தேதி அன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.61 என்ற அளவில் இருந்தது.
நேற்றைய வர்த்தக நேர முடிவில் 68.61 ஆக இருந்த ரூபாயின் மதிப்பு இன்று மேலும் சரிவைச் சந்தித்தது.  இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின்போது டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 28 காசுகள் சரிந்து 68.89 ஆக இருந்தது.
பின்னர்,  சிறிது நேரத்தில் மேலும் சரிந்து டாலருக்கு நிகரான மதிப்பு ரூ.69 என்ற நிலையை எட்டியது. 2018-ம் ஆண்டின் தொடக்கம் முதல் இதுவரை இந்திய ரூபாயின் மதிப்பு 8 சதவீதத்திற்கும் மேல் சரிவைச் சந்தித்துள்ளது.

Related articles

Recent articles

spot_img