டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நேற்று 3 வாரங்களில் இல்லாத அளவாக ரூ73.95 ஆக சரிந்தது. இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் 12 சதவீதத்துக்கு மேல் மதிப்பை இழந்துள்ளது. தொடர் சரிவுக்கு பிறகு கடந்த வாரம் சற்று மீaட்சி அடைந்த ரூபாய் நேற்று மீண்டும் சரிந்தது. ரிசர்வ் வங்கி கவர்னர் ராஜினாமா செய்வதாக வெளியான தகவல், ரிசர்வ் வங்கி முடிவுகளில் தலையீடு பற்றிய நிதியமைச்சக அறிக்கையை தொடர்ந்து, காலையில் ரூ73.91ஆக சரிந்த ரூபாய் மதிப்பு வர்த்தக இடையில் ரூ74.14ஆக சரிந்தது. பின்னர் வர்த்தக முடிவில் 27 காசு மதிப்பு குறைந்து ரூ73.95ஆக நிலைபெற்றது. இருப்பினும் பங்குச்சந்தைகள் ஏற்று ஏற்றம் கண்டன. இதனால் பங்கு மதிப்பு ரூ1.92 லட்சம் கோடி அதிகரித்திருந்தது.
Popular Categories




