ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் புதிய சீசன் இன்று தொடங்குகிறது. பி பிரிவில் தமிழகம் – மத்தியபிரதேசம் மோதும் லீக் ஆட்டம் திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. தேசிய அளவில் டெஸ்ட் போட்டிகளுக்கான திறமை வாய்ந்த வீரர்களை அடையாளம் காண உதவும் ரஞ்சி கோப்பை தொடரின் புதிய சீசன் (2018/19) இன்று தொடங்குகிறது. மொத்தம் 36 அணிகள் இரண்டு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுகின்றன. பாபா இந்திரஜித் தலைமையிலான தமிழக அணி, பி பிரிவில் தனது முதல் லீக் ஆட்டத்தில் மத்தியபிரதேச அணியை எதிர்கொள்கிறது. திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி வளாக மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டியில் (நவ.1-4), அனுபவ வீரர்கள் ஆர்.அஷ்வின், முரளி விஜய், அபினவ் முகுந்த் ஆகியோர் களமிறங்குவதால் தமிழக அணி உற்சாகமாக உள்ளது. வெஸ்ட் இண்டீசுடன் டி20 தொடரில் விளையாட உள்ளதால் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் இருவரும் இடம் பெறவில்லை.நமன் ஓஜா தலமையிலான த்தியபிரதேச அணியில் நட்சத்திர வீரர்கள் இல்லையென்றாலும், கடும் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Popular Categories




