
தைரியம் இருந்தா உங்க அட்ரஸ் போட்டு மீம்ஸ் போடுங்க பார்ப்போம் என்று கூறியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.
என்னைப்பற்றி மிக மோசமாக மீம் போடுபவர்களுக்கு தைரியம் இருந்தால் தொலைப்பேசி எண் & முகவரியை குறிப்பிட்டு பதிவிடுங்கள் என்பது, மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் விடுத்துள்ள சவால்.
முன்னதாக, ஹெச். ராஜா மீது புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுண்டு என்று கூறிய ஜெயக்குமார், பெண்மைக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் யாரும் கருத்து தெரிவிக்கக்கூடாது என்று கூறினார்.
எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் பெண்களை அவமரியாதையாக பேசக்கூடாது என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.
சமூக வலைத்தளங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தன்னையும் மீம்ஸ் போட்டு தாக்குகிறார்கள் என்றும், அட்ரஸ் போன் நம்பருடன் மீம்ஸ் போட வேண்டும் என்றும், அனாமதேயமாக போடக்கூடாது என்றும் சவால் விடுத்தார்.
அமைச்சர் ஜெயக்குமாரின் சவாலை எத்தனை மீம்ஸ் க்ரியேட்டர்கள் ஏற்கிறார்கள் என்று பார்க்கலாம்…!



