சரஸ்வதி சிந்துவெளி நாகரிகம்! அறியாமையில் கூச்சலிட்ட தமிழக எம்.பி.,க்களைக் கண்டு தலையிலடித்துக் கொள்ளும் தமிழர்கள்!

Published:

nirmal kani - 2026

ஆங்கிலேயன் எழுதிவெச்ச அதே அரதப் பழசு வரலாற்றை பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவர்கள்தான், தமிழகத்தின் எழுத்தாளர் என்றும் பின்னர் எம்.பி., என்றும் ஆனவர்களாக இருக்கிறார்கள் என்பது இன்று பளிச்செனத் தெரிந்தது. அதற்குக் காரணம், பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்ட ஒரு வார்த்தை!

சிந்துவெளி நாகரிகத்தை சரஸ்வதி சிந்துவெளி நாகரிகம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டதற்கு தமிழக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதனை பெரும் ஆச்சரியத்துடன் மற்ற எம்பி.,க்கள் பார்த்தனர். இந்த அளவுக்கா ஆங்கிலேய அடிமைகளாக தமிழக எம்.பி.க்கள் உள்ளனர் என்ற ஆச்சரியம்தான் அது!

2020-21-க்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அவர் தமது பேச்சின் போது சரஸ்வதி சிந்துவெளி நாகரிகம் எனக் குறிப்பிட்டார்.

இதற்கு திமுக.,வினைச் சேர்ந்த தமிழக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழக கூட்டணிக் கட்சி எம்.பி.,க்களும் கூச்சலிட்டனர். சிந்துவெளி நாகரிகம் என்பதை மிகவும் பிற்காலத்தியதாக உள்ள காலக் கணக்கீட்டில் ஆங்கிலேயர்கள் தெரிவித்துள்ளனர். அதுவே இந்தியாவின் முன்னோடி நாகரிகம் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால், சிந்து வெளி நாகரீகத்துக்கும் முன்னர் சரஸ்வதி நதி நாகரீகம் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். எனவே சிந்து வெளி நாகரிகம் என்பது, சரஸ்வதி நதி நாகரீகத்தின் எச்சம் என்று கூறுகின்றனர்.

இதனை பிரதிபலிக்கும் வகையில் நிர்மலா சீதாராமனும் நாடாளுமன்றத்தில் சரஸ்வதி சிந்துவெளி நாகரிகம் என குறிப்பிட்டதால் தமிழக எம்.பி.க்கள், தாங்கள் தொடக்கப் பள்ளிக் கூடத்தில் படித்த வரலாற்றுப் பாடத்தில் எழுதிவைத்ததை நினைவில் கொண்டு, அவ்வாறு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ALSO READ:  கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

சரஸ்வதி -சிந்து நாகரீகம் என்று குறிப்பிட்டதால் சிந்து வெளி நாகரீகத்திற்குப் புதிய பெயர் சூட்டுகிறார் நிர்மலா சீதாரமன் என்று மதுரை மக்களவை உறுப்பினர் கூறியதாக ஊடகங்களில் கருத்து வெளியிடப் பட்டது.

ஆனால் பல வரலாற்றிஞர்கள் அந்தப் பெயரைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். இணைப்பில் உள்ளது A History of Ancient and Early Medieval India from the stone age to the 12th century என்ற நூலில் இருந்து பெறப்பட்டது. (பக்கம் 137) இந்த நூலை எழுதியவர் உபிந்தர் சிங். அவர் மன்மோகன் சிங் அவர்களின் மகள். தில்லிப் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் இவர்.

saraswathi sindhu - 2026

இது போல் தமிழகத்தைச் சேர்ந்த கல்யாணராமன் என்பவரும் சரஸ்வதி நதி நாகரீகம் குறித்து பெருமளவில் ஆராய்ச்சிகள் செய்து நூல்களை வெளியிட்டிருக்கிறார். இவற்றை எல்லாம் படித்தறியாமல், ஏதோ தாங்கள் படித்த கிறிஸ்துவ கான்வெண்ட் பள்ளிக்கூடங்களில் கற்பிக்கப் பட்ட பாடங்களே உண்மை என்று நம்பிக் கொண்டு கூச்சல் போட்ட தமிழக எம்பி.,க்களின் அறியாமையை எண்ணி தலையில் அடித்துக் கொள்கின்றனர் தமிழறிஞர்கள்.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img