அதிவிரைவாக செய்ய சேமியா ரவை குழிப்பணியாரம்!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
semiya - 2026

சேமியா – ரவை குழிப்பணியாரம்

தேவையானவை:

சேமியா – ஒரு கப்,
ரவை – அரை கப்,
பொடித்த வெல்லம் – ஒரு கப்,
வாழைப்பழம் – 2,
ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்,
தேங்காய்த் துண்டுகள்
(பொடியாக நறுக்கி, வறுத்தது) – கால் கப்.

kuzhi paniyaram - 2026

செய்முறை:

சேமியாவை அரைமணி நேரம் ஊற விடவும். வெல்லத்தை தண்ணீரில் நன்கு கரைத்து வடி கட்டவும். ஊற வைத்த சேமியா, வெல்லக் கரைசல், ஏலக்காய்த்தூள், ரவை, பிசைந்த வாழைப்பழம், தேங்காய்த் துண்டுகள் சேர்த்து பணியார மாவு பதத்தில் கலக்கிக் கொள்ளவும்.

குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி, அதில் நெய் விட்டு, மாவை ஒரு ஸ்பூனில் அளவாக ஒவ்வொரு குழியிலும் விட்டு, மிதமான தீயில் வேக வைத்து எடுத்து சூடாகப் பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.