கேரளப் பெண்ணுக்கு பொங்கினீர்களே! நாதியற்றுப் போனதா தமிழ்ச் சிறுமி விவகாரம்? நியாயம் வேண்டும் #பேச்சியம்மாள்!

உரத்த சிந்தனை சற்றுமுன் தமிழகம் நெல்லை புகார் பெட்டி
pechiammal - 2026

எப்படி தெரிவிப்பார்கள் எதிர்ப்பு? இறந்த குழந்தை ஹிந்து! பள்ளி நடத்துவது கிறிஸ்தவ மிஷனரிகள்!

சென்னை ஐஐடியில் படித்த #கேரளமாணவிபாத்திமா_லத்தீப், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, திருமாவளவன், வைகோ, கம்யூனிஸ்ட் கட்சியினர், அட அவ்வளவு ஏன்… புதுசாய் அரசியல் வானில் நடிக்க வந்திருக்கும் நடிகர் கமலஹாசன் உள்ளிட்டவர்களெல்லாம் தொடர் போராட்டங்களை நடத்தினார்களே…!

ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி, அதுவும் நம் தமிழ்ச் சிறுமி…விவகாரத்தில் நாதியற்றுப் போய்விட்டதே! தமிழகமே நீ ஊமையாகிவிட்டாயே! என்று உள்ளம் குமுறுகின்றனர் தமிழ் உணர்வாளர்கள். வயது பெண் என்றும் பாராமல் அடித்து, அவமானப்படுத்தி, பள்ளியைவிட்டு துரத்தியதால் மனமுடைந்த அந்த மாணவி தற்கொலை செய்துகொண்டாள். இதுவரை ஒரு அரசியல்வாதிகூட சிறு கண்டனமும் தெரிவிக்கவில்லை, ஆறுதலும் தெரிவிக்கவில்லை…. காரணம், மரித்தவள் இந்த மண்ணின் மகளான தமிழ்ச் சிறுமி. அவள் சாவுக்குக் காரணம் வந்தேறி கிறிஸ்துவம்!

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் இவரது மகள் #பேச்சியம்மாள். 15 வயதான பேச்சியம்மாள், பாளையங்கோட்டையில் உள்ள #குழந்தைஏசுமகளிர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

justice pechiammal - 2026

இவர் அதிகமாக மதிப்பெண் பெறவில்லை என்றுகூறி மாற்றுச்சான்றிதழ் வாங்கி செல்லுமாறு பள்ளி நிர்வாகம் பேச்சியம்மாளின் ஏழை பெற்றோரை வற்புறுத்தி உள்ளது. இதன் பின்னரும் படிக்கும் ஆர்வத்தால் பள்ளிக்கு வந்த மாணவி பேச்சியம்மாளை வகுப்பு ஆரிசியை #கேத்திரின், தமிழ் ஆசிரியை #டெய்சி ஆகியோர், வயது பெண் என்றும் பாராமல் மற்ற மாணவிகள் முன்னிலையில் அடித்து, அவமானப்படுத்தி உள்ளனர். அதோடு வகுப்பில் பேச்சியம்மாளை இருந்து துரத்தியடித்து பள்ளி வளாகத்தில் இருந்து வெளியேற்றி உள்ளனர்.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

இந்த அவமானம் தாங்காமல் வீட்டுக்கு வந்த பேச்சியம்மாள், அழுதபடியே பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். அடித்து அவமானப்படுத்தி, பள்ளியில் தொடந்து படிக்கவிடாமல் துரத்தியது குறித்து அழுதபடியே கூறியுள்ளார். பெற்றோர் சமாதானப் படுத்தியும், அவர் சமாதானம் ஆகவில்லை.

பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து பள்ளி சீருடையிலேயே அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி பேச்சியம்மாள் தற்கொலை செய்துகொண்டது தூத்துக்குடி மாவட்டத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. இதனால் உறவினர்களும் கிராம வாசிகளும் குழந்தை ஏசு பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். மாணவி பேச்சியம்மாள் சாவுக்கு காரணமான தமிழ் ஆசிரியை டெய்சியை கைது செய்ய வேண்டுமென்று அவர்கள் போராடினார்கள். அதோடு பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதுதொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவி பேச்சியம்மாள், ஆசிரியை அடித்து, அவமானப்படுத்தி, பள்ளியைவிட்டு துரத்தப்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டபோது, தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி எம்பியான #கனிமொழி தூத்துக்குடியில்தான் முகாமிட்டிருந்தார். இருந்தாலும் இதுபற்றி கேள்விபட்ட பின்னரும் நேரில் சென்று பார்க்கவில்லை. கண்டனமும் தெரிவிக்கவில்லை. இரங்கலும் தெரிவிக்கவில்லை.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

ஆனால் சமீபத்தில் இவர் தில்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவிக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டதற்காக, சென்னையில் இருந்து விமானம் ஏறி தில்லி சென்று நேரில் அவரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வந்தார். அதேபோல சென்னை ஐஐடியில் தற்கொலை செய்துகொண்ட கேரள மாணவி பாத்திமா லத்தீபுக்காக தொடர்ந்து போராட்டங்களை நடத்தினார். ஆனால் இந்தத் தமிழ் மண்ணின் மகளான மாணவி பேச்சியம்மாள், வந்தேறி கிறிஸ்துவ ஆசிரியர்களின் துன்புறுத்தினால் அவமானப்பட்டு, பள்ளியில் இருந்து துரத்தப்பட்டு மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதை கண்டிக்ககூட கனிமொழிக்கு துப்பில்லை என்று உள்ளம் குமுறுகின்றனர் தூத்துக்குடி வாசிகள்!

இதற்கெல்லாம் ஒரே காரணம்தான், சென்னையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட கேரள மாணவி முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். தூத்துக்குடி மாணவி பேச்சியம்மாள், #தமிழச்சியாக இருந்தாலும் இந்து மதத்தை சேர்ந்தவர். அதோடு மாணவி தற்கொலைக்கு காரணமான ஆசிரியைகள் #கேத்தரினா மற்றும் #டெய்சி #கிறிஸ்தவமதத்தை சேர்ந்தவர்கள்.

நீட் தேர்வில் வெற்றி பெறாததால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவுக்காக ரத்தக்கண்ணீர் வடித்த மு.க.ஸ்டாலின் கும்பல்களும், ஆசிரியைகள் அடித்து, அவமானப்படுத்தி, பள்ளியில் இருந்து துரத்தியதால் தற்கொலைக்கு தள்ளப்பட்ட மாணவி பேச்சியம்மாளுக்காக இரங்கல்கூட தெரிவிக்காதது உணர்வுள்ள தமிழர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ALSO READ:  எல்லைக்கு உள்ளும் புறமும்... பிரதமரை குறி வைக்கும் அபாயம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.