2.0 படத்தின் பிரம்மாண்டமான ட்ரெய்லர் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஷங்கரின் ‘2.0’ மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ‘பேட்ட’ என 2 படங்கள் இன்னும் வெளிவர உள்ளன.
‘எந்திரன்’ படத்தின் 2வது பாகமான ‘2.0’வை’ லைகா புரொடக்சன்’ நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். 3D தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார்.
வில்லன் வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அக்சய்குமார் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பதால், அதிரடி மாஸ் காட்டியிருக்கிறது 2.0
படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், மேக்கிங் வீடியோக்கள் பல வெளியாகி, பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், டிரைலர் இப்போது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நவம்பர் 29-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #2Point0TrailerLaunch மற்றும் #2Point0TrailerDay ஹேஷ்டேக்குகள் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளது! இது வரை 80 லட்சம் பார்வைகள் கடந்து சென்றுள்ளது யுடியுபில்!



